| பையரவா இங்கிருந்தா | | யோஎன்னப் பரிந்தென்னை | | உய்யஅருள் செய்யவல்லான் | | உளோம்போகீர் என்றானே. | | 3 |
905. | கம்பமருங் கரியுரியன் | | கறைமிடற்றன் காபாலி | | செம்பவளத் திருவுருவன் | | சேயிழையோ டுடனாகி | | நம்பியிங்கே யிருந்தாயே | | என்றுநான் கேட்டலுமே | | உம்பர்தனித் துணையெனக்கு | | ளோம்போகீ ரென்றானே. | | 4 |
அறியாமையாற் பிழைசெய்தேனாயினும், பொறுத்தல் உனக்குக் கடமையன்றோ; அங்ஙனம் பொறுத்து எனக்கு அருள் பண்ணாமையின், நீ இங்கே இருக்கின்றாயோ' என்று யான் உரிமையோடு வினாவ, எப்பொழுதும் என்மேல் அருள்கூர்ந்து, என்னை உய்யுமாறு தன் திருவருளைச் செய்ய வல்ல எம்பெருமான், இதுபோது, 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே; இதுவோ அவனது கண்ணோட்டம்! கு-ரை: "செய்வினை" என்றதனால், அதன் மறுதலை வினையும் கொள்ளப்பட்டது. ஒன்று - சிறிது. 'ஒன்றும்' என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. "பொறுத்தி" என்ற செயவெனெச்சம் தொழிற்பெயர்ப் பொருள் தந்தது. வேண்டுதல், இன்றியமையாமை யாதலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. 4. பொ-ரை: 'நம்பியே, நீ, செவ்விய அணியினை யுடைய மலை மகளோடு உடனாயினவன் ஆதலின், இருவீரும் இங்கே இருக்கின்றீர்களோ' என்று நான் வினவ, அசைதல் பொருந்திய யானையினது தோலையும் கறுத்த கண்டத்தையும், கபாலத்தையும், செவ்விய பவளம்போலும் உருவத்தையும் உடையவனும், தேவர்களுக்கு ஒப்பற்ற துணைவனும் ஆகிய இறைவன், எனக்கு, 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்! கு-ரை: "உடனாகி" என்றது பெயர். அதன்பின் 'ஆதலின்'
|