906. | பொன்னிலங்கு நறுங்கொன்றை | | புரிசடை மேற்பொலிந்திலங்க | | மின்னிலங்கு நுண்ணிடையாள் | | பாகமா எருதேறித் | | துன்னியிரு பால்அடியார் | | தொழுதேத்த அடியேனும் | | உன்னமதாய்க் கேட்டலுமே | | உளோம்போகீர் என்றானே. | | 5 |
907. | கண்ணுதலால் காமனையுங் | | காய்ந்ததிறற் கங்கைமலர் | | தெண்ணிலவு செஞ்சடைமேல் | | தீமலர்ந்த கொன்றையினான். |
என்னும் சொல்லெச்சம் வருவிக்க. "இருந்தீர்" என்ற பயனிலைக்கு 'இருவீரும்' என்னும் எழுவாய், வெளிப்படாது நின்றது. 5. பொ-ரை: பொன்போல விளங்குகின்ற, நறுமணம் பொருந்திய கொன்றைமலர், சடையின்மேற் பொருந்துதலால், மேலும் பொலிவுற்று விளங்க, மின்னலினது தன்மை விளங்குகின்ற நுண்ணிய இடையினை உடையவள் ஒருபாகத்தில் இருக்க, எருதை ஏறுபவனாகிய சிவபெருமானை, இருபாலும் அடியார்கள் நெருங்கி, வணங்கித் துதிக்க, யானும் உயர்ந்த முறைமையினாலே, 'கோயிலுளாயே' என்று கேட்க, அவன், 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்! கு-ரை: "எருதேறி" என்றது பெயர். அதன்பின் இரண்டாவதன் தொகைக்கண் வல்லினம் இயற்கை மருங்கின் மிகற்கை தோன்ற லாயிற்று. (தொல். எழுத்து. 157) வல்லினம் மிகாமையும் பாடம். 'எருதேறித் தொழுதேத்த' என இயையும். உயர்ந்த முறைமையாற் கேட்டது. 'நீ, அடியவர் துயர் கண்டு வாளாவிராயன்றே' என்னும் குறிப்புத் தோன்ற வினாயது. "கேட்டலும்" என்றது உம்மீற்று வினையெச்சம். 6. பொ-ரை: யாவரையும் வெல்லுகின்ற காமனையும் தனது நெற்றிக்கண்ணால் எரித்த ஆற்றலையுடைய, கங்கை விளங்குகின்ற, தெள்ளிய நிலவை அணிந்த சடையின்மேல் தீயின்கண் மலர்ந்தது போலத் தோன்றுகின்ற கொன்றை மலரை உடைய பெருமானை,
|