பக்கம் எண் :

1193
 
கண்மணியை மறைப்பித்தாய்

இங்கிருந்தா யோஎன்ன

ஒண்ணுதலி பெருமான்றான்

உளோம்போகீர் என்றானே.

6

908.பார்நிலவு மறையோரும்

பத்தர்களும் பணிசெய்யத்

தார்நிலவு நறுங்கொன்றைச்

சடையனார் தாங்கரிய

கார்நிலவு மணிமிடற்றீர்

ஈங்கிருந்தீ ரேஎன்ன

ஊரரவம் அரைக்கசைத்தான்

உளோம்போகீர் என்றானே.

7


அடியேன், 'என் கண்மணியை மறைப்பித்தவனே, இங்கு இருக்கின்றாயோ?' என்று வினவ, ஒள்ளிய நெற்றியையுடைய வளாகிய உமையம்மைக்குத் தலைவன், 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!

கு-ரை: 'காமனையும்' என்னும் உம்மை சிறப்பு. 'நிலவுச் சடை' என்னும் சகர ஒற்றும், 'கொன்றையினானை' என்னும் இரண்டன் உருபும், தொகுக்கும்வழித் தொகுத்தலாயின. "தீமலர்ந்த கொன்றை" என்றது, மருட்கை யுவமம். 'ஒண்ணுதலி பெருமானார்' என்பது பாடம் அன்று.

7. பொ-ரை: 'மாலையாகப் பொருந்திய மணம் உடைய கொன்றைப் பூவை அணிந்த சடையை உடையவரே, தாங்குதற்கரிய நஞ்சுபொருந்திய, நீலமணிபோலும் கண்டத்தையுடையவரே, நீர், மண்ணுலகிற் பொருந்திய அந்தணர்களும், அடியவர்களும் பணிசெய்ய இங்கு இருக்கின்றீரோ? என்று யான் வினவ, ஊர்கின்ற பாம்பை அரையிற்கட்டிய இறைவன், 'உளோம்; போகீர்' என்றானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!

கு-ரை: "சடையனார்" அண்மை விளி. 'கார்' என்னும் நிறப் பண்புப்பெயர் ஆகுபெயராய், நஞ்சினை உணர்த்திற்று.