பக்கம் எண் :

1194
 
909.வாரிடங்கொள் வனமுலையாள்

தன்னோடு மயானத்துப்

பாரிடங்கள் பலசூழப்

பயின்றாடும் பரமேட்டி

காரிடங்கொள் கண்டத்தன்

கருதுமிடந் திருவொற்றி

யூரிடங்கொண் டிருந்தபிரான்

உளோம்போகீர் என்றானே.

8

910.பொன்னவிலுங் கொன்றையினாய்

போய்மகிழ்க் கீழிருவென்று

சொன்னஎனைக் காணாமே

சூளுறவு மகிழ்க்கீழே

என்னவல்ல பெருமானே

இங்கிருந்தா யோஎன்ன

ஒன்னலரைக் கண்டாற்போல்

உளேஉளோம்போகீர் என்றானே.

9


8. பொ-ரை: கச்சினது இடம் முழுவதையுங் கொண்ட அழகிய தனங்களை யுடையவளாகிய உமையோடு, பூதங்கள் பல சூழ, முதுகாட்டிற் பலகாலும் ஆடுகின்ற, மேலான நிலையில் உள்ளவனும், கருமை நிறம் தனக்கு இடமாகக் கொண்ட கண்டத்தை யுடையவனும், நான் விரும்பும் இடமாகிய திருவொற்றியூரையே தனக்கு இடமாகக் கொண்டவனும் ஆகிய இறைவன், யான் வினவியதற்கு, 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!

கு-ரை: 'யான் வினவியதற்கு' என்பது, இயைபு பற்றிக் கொள்ளக்கிடந்தது. வினவிய பொருள், மேலெல்லாம் சொல்லப்பட்டது.

9. பொ-ரை: "பொன்போலுங் கொன்றை மலரை அணிந்த பெருமானே, நீ, கோயிலை விட்டுப்போய் மகிழ மரத்தின் கீழ் இரு" என்று சொன்ன என்னை, அதன் பொருட்டுக் காணாமலே, சங்கிலியிடம் சென்று, 'சூளுறவு, மகிழ மரத்தின் கீழே ஆகுக' என்று சொல்ல வல்ல பெருமானே, நீ, இங்கு இருக்கின்றாயோ என்று யான் வினவ,