911. | மான்றிகழுஞ் சங்கிலியைத் | | தந்துவரு பயன்களெல்லாம் | | தோன்றஅருள் செய்தளித்தாய் | | என்றுரைக்க உலகமெலாம் | | ஈன்றவனே வெண்கோயில் | | இங்கிருந்தா யோஎன்ன | | ஊன்றுவதோர் கோலருளி | | உளோம்போகீர் என்றானே. | | 10 |
எம்பெருமான், என்னை, பகைவரைக் கண்டாற்போல வெறுத்து, 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்! கு-ரை: "நவிலும்" உவம உருபு. 'காணுதல்' என்பது கண்டு அறிவித்தலை உணர்த்திற்று. 'ஆகுக' என்பது சொல்லெச்சம். "என்ன வல்ல" என்றது, 'இவ்வாறு கீழறுக்கவல்ல' என உள்ளுறை நகை. 'வெறுத்து' என்பது, உவமத்திற் பெற்றது. 'எம் பெருமான்' என்னும் எழுவாய், தோன்றாது நின்றது; வருகின்ற திருப்பாடலினும் இவ்வாறு கொள்க. இங்குக் குறிக்கப்பட்ட வரலாற்றின் விரிவைப் பெரிய புராணத்துட் காண்க. 10. பொ-ரை: 'மான் போல விளங்குகின்ற சங்கிலியை எனக்கு ஈந்து, அதனால் உளவாகின்ற பயன்களெல்லாம் எனக்கு நன்கு விளங்கும்படி திருவருள் செய்து காத்தாய்' என்று சொல்லுதற்கு, 'உலகத்தையெல்லாம் பெற்ற தந்தையே, வெண்கோயிலாகிய இவ்விடத்தில் நீ இருக்கின்றாயோ' என்று யான் வினவ, எம் பெருமான், ஊன்றுவதாகிய ஒருகோலை அருளி, 'உளோம்; போகீர்' என்றா னன்றே! இத்துணையது தானோ அவது கண்ணோட்டம்! கு-ரை: "அருள் செய்தளித்தாய்" என்றதனை, கற்கறித்து, 'நன்கட்டாய்' என்றல்போலக் கொள்க. கொள்ளவே, 'உலகமெலாம் ஈன்றவனே' என்றதும், நகையாயிற்று. ஆகவே, 'பயன்களெல்லாம்' என்றது, கண்ணிழந்ததையும் உடம்பிற் பிணியுண்டாயதையும் குறித்ததாம். "ஊன்றுவதோர் கோலருளி" என்றமையால், குறிப்பெச்சம் சிறிது வேறுபட்டது.
|