பக்கம் எண் :

1196
 
912.ஏராரும் பொழில்நிலவு

வெண்பாக்கம் இடங்கொண்ட

காராரும் மிடற்றானைக்

காதலித்திட் டன்பினொடும்

சீராருந் திருவாரூர்ச்

சிவன்பேர்சென் னியில்வைத்த

ஆரூரன் தமிழ்வல்லார்க்

கடையாவல் வினைதானே.

11

திருச்சிற்றம்பலம்


"என்னுடைய பிரான்அருள்இங் கித்தனைகொ லாம் என்று
மன்னுபெருந் தொண்டருடன் வணங்கியே வழிக்கொள்வார்"

(தி. 12 ஏ. கோ. புரா. 218)

எனச் சேக்கிழார் அருளுமாறுங் காண்க.

11. பொ-ரை: புகழ் நிறைந்த திருவாரூரில் உள்ள சிவ பொருமானது திருப்பெயரைத் தலையில் வைத்துள்ள நம்பியாரூரன், அழகுநிறைந்த சோலைகள் விளங்குகின்ற திருவெண்பாக்கத்தை இடமாகக் கொண்ட, கருமை நிறைநத கண்டத்தை யுடையவனை மிக விரும்பி, அன்போடும் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்மேல், வலிய வினைகள் வந்து சாராவாம்.

கு-ரை: "அன்பினொடும்" என்ற உம்மை, சிறப்பு. "பாடிய" என்பது சொல்லெச்சம். "வல்லார்க்கு" என்றது உருபு மயக்கம். "தான்" என்னும் அசைநிலை, பன்மை யொருமை மயக்கமாய் வந்தது.