90. கோயில் பதிக வரலாறு: சுவாமிகள், திருமுதுகுன்றம் பணிந்து, "மெய்யை முற்றப் பொடிப் பூசி" என்னும் திருப்பதிகம் பாடிப் பன்னிரண்டாயிரம் பொன் பெற்று, 'இப் பொன் எல்லாம் ஆரூரிலுள்ளார் எல்லோரும் வியக்குமாறு பெற அருள்செய்ய வேண்டும்' என்று விண்ணப்பித்தார். பெருமானும், 'மணிமுத்தாற்றிலிட்டு ஆரூர்க்குளத்தில் கொள்க' என்று அருளினார். நம்பியாரூரரும் அப் பொன்னில் மாற்றறிவதற்காகச் சிறிது வெட்டி எடுத்துக்கொண்டு ஆற்று நீரில் பொற்றிரளைப் போட்டு, 'அன்று என்னை வலிந்து ஆட்கொண்ட அருளை இதில் அறிவேன்' என்று சொல்லித் தில்லையை வணங்கும் விருப்பினராய்ப் பல பதிகளையும் வணங்கிக்கொண்டு, அத் தலத்தையடைந்து, கூத்தப்பெருமானைக் கண்டு, ஆடிய திருவடிகளை வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 115) இதில், மேலைச் சிதம்பரம் ஆகிய பேரூரை நினைந்து பாடியிருத்தல் குறிப்பிடத் தக்கது. குறிப்பு: இத்திருப்பதிகம், தில்லையில் சுத்தப்பெருமானது திருக்கூத்தினை வணங்கப்பெற்ற பேற்றினது அருமையை நினைந்துருகி, நெஞ்சொடு கிளத்தலாக அருளிச்செய்தது. பண்: குறிஞ்சி பதிக எண்: 90 திருச்சிற்றம்பலம் 913. | மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ | | வாழு நாளுந் | | தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கி லிடும்போது | | தடுத்தாட் கொள்வான் |
1. பொ-ரை: மனமே, நீ குஞ்சித்து ஆடுகின்ற தனது திருவடிக்குச் செய்யும் தொண்டின்கண் வாழாமல் உண்டு உடுத்தே வாழும் நாள்களிலும், உன்னை அவ்வாறே சென்று கெடாதவாறு தடுத்து, தனது இச்சைவழி நடாத்தி, பின்பு நீ முன்செய்த பாவத்தின்பொருட்டு உன்னைக் கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனையும்
|