பக்கம் எண் :

1198
 
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலுங்

கரிய பாம்பும்

பிடித்தாடிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்

பெற்றா மன்றே.

1

914.பேராது காமத்திற் சென்றார்போ லன்றியே

பிரியா துள்கிச்

சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுந்

திருவி னாரை.


தடுத்து ஆட்கொள்பவனாகிய, கையில் தமருகத்தையும், நெருப்பு எரிகின்ற தகழியையும், சினந்த ஆடுகின்ற கரிய பாம்பையும் பிடித்துக்கொண்டு ஆடுகின்ற பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம் பலத்தில் விளங்குகின்ற நம்பெருமானை அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது!

கு-ரை: இத்திருப்பாடலுள், சுவாமிகள், தம்மைத் தடுத்தாட் கொண்ட அநுபவத்தையே அருளினமை காண்க. "மடித்தாடும்" என்ற பெயரெச்சம், "அடிமை" என்றதன் முதனிலையோடு முடிந்தது. அடிமை அடிக்குரிய தன்மை, "வாழும்" எனப் பின்னர் வருதலின், முன்னர், "அன்றியே" என்றது, 'வாழ்தலன்றியே' என்றதாயிற்று. அவ்வேகாரம், தேற்றம். அதனால், 'மடித்தாடும் அடிமைக்கண் வாழ்தலே செயற்பாலது' என்பது விளங்கிற்று. 'அடிமை' என்பதில் மை, பகுதிப்பொருள் விகுதி, எனவும், 'அன்றி - பகைத்து' எனவும் உரைப்பாரும் உளர். 'அடிமைக்கள்', 'அடிமக்கள்' என்பனவும் பாடம். "நாளும்" என்ற உம்மை, இழிவு சிறப்பு. 'செக்கிலிடுதல்' என்றது, ஒறுத்தலைக் குறிக்கும் குறிப்பு மொழியாய் நின்றது. வருகின்ற திருப்பாடல்களோடு ஒப்ப, "செக்கிலிடும்போது" என வாளா அருளினாராயினும், அவ்விடத்து எச்ச உம்மை விரித்தல் திருவுள்ளம் என்பது, ஈரிடத்தும், 'தடுத்து' என அருளியதனான் விளங்கும். "ஆட்கொள்வான்" என்றது, 'அருள்செய்வான்' என்னும் பொருளது; 'கடுத்தாடும் பாம்பு' எனக் கூட்டுக. "ஆடி" என்றது பெயர். ஆயினும், இயைபு நோக்கி, இவ்வாறு உரைக்கப்பட்டது. "அன்றே" என்றது, தேற்றம். 'இனி நாம் பெற வேணடுவது யாது' என்பது குறிப்பெச்சம்.

2. பொ-ரை: மனமே, சாங்காறும், நீங்காது உலக இன்பத்தில் சென்றவர்போலவன்றி, புகழ் நிறைந்த அன்பையுடையவர்களாய்,