| ஓராது தருமனார் தமர்செக்கி லிடும்போது | | தடுத்தாட் கொள்வான் | | பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் | | பெற்றா மன்றே. | | 2 |
915. | நரியார்தங் கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து | | நாளும் உள்கித் | | திரியாத அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுஞ் | | சிந்தை யாரைத் | | தரியாது தருமனார் தமர்செக்கி லிடும்போது | | தடுத்தாட் கொள்வான் | | பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் | | பெற்றா மன்றே. | | 3 |
தன்னை இடைவிடாது நினைத்து, திருமுன் சென்று தனது திருவடியில் வீழ்ந்து வணங்கும் திருவுடையவரை, அவரது நிலையை அறியாமல், கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய, பெருமையுடையவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது! கு-ரை: மேலைத் திருப்பாடலில் உள்ள 'மனனே' என்பது, ஏனைய பாடல்களினும் ஏற்ற பெற்றியிற்சென்று இயையும். 'சாங்காறும்' என்பது, இசையெச்சம். 'சென்றாற்போல்' என்பது பாடம் அன்று. திரு - திருவருள். "பேராளர்" என்றது தில்லை வாழந்தணரை. இனி, "பெரியோர்கள், பெருமையார்" என அருளுவனவும் அவரை யேயாம். 3. பொ-ரை: மனமே, நரியினது வஞ்சனைபேலும் வஞ்சனையினால் இரண்டுபட்ட தன்மையின் நீங்கி, நாள்தோறும் தன்னை நினைத்து, மாறுபடாத அன்பை உடையவராய்த் திருமுன்சென்று, தனது திருவடியில் வீழ்ந்து வணங்குங் கருத்துடையவரை, கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது சிறிதும் தாழாது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய, பெரியோர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது!
|