பக்கம் எண் :

1200
 
916.கருமையார் தருமனார் தமர்நம்மைக் கட்டியகட்

டறுப்பிப் பானை

அருமையாந் தன்னுலகந் தருவானை மண்ணுலகங்

காவல் பூண்ட

உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை

மறுக்கஞ் செய்யும்

பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்

பெற்றா மன்றே.

4


கு-ரை: நரியினது கள்ளம், அதனோடு ஒரு தன்மைத்தாய கள்ளத்தைக் குறித்தது. அஃதாவது எஞ்ஞான்றும் பயன்கருதியன்றி அடையாமை, 'பிரியாத அன்பராய்' என்னும் பாடம் சிறவாமை யறிக "சிந்தை" என்றது, கொள்கையை.

4. பொ-ரை: மனமே, கருமை நிறம் பொருந்திய கூற்றுவனது ஏவலர் நம்மைக் கட்டுவராயின், அக் கட்டினை அறுத்தெறிபவனும், நமக்கு, பிறர் பெறுதற்கரிய தனது உலகத்தையே தருபவனும், பல்லவ மன்னன் இந்நிலவுலகத்தை நன்நெறியில் வைத்துக் காத்தலை மேற் கொண்ட இயைபினால், அவனுக்குத் திறைகொடாது மாறுபடும் பிற மன்னர்களை வருத்துதல் செய்கின்றவனும் ஆகிய, பெருமை யுடையவர்களது பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது!

கு-ரை: கருமை பொருந்துதல், தருமனார், தமர் ஆகிய இருவர்க்கும் கொள்க. 'கருமையால்' என்பதும் பாடம். 'கட்டுவராயின்' என்பதும், 'நன்னெறியில் வைத்து' என்பதும் ஆற்றலான் வந்தன.

"கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்போன் கழற்சிங்க னடியார்க்கும் அடியேன்"

(தி. 7 ப. 39 பா. 9)

எனச் சுவாமிகள், திருத்தொண்டத்தொகையுள் அருளிச்செய்தமையின், ஈண்டு, 'பல்லவன்' என்றது, அந்நாயனாரையே என்பர். இதனாலும் "பல்லவர்க்கு" என்பது பாடமாகாமை யறிக.