பக்கம் எண் :

1201
 
917.கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் வெண்மதியக்

கண்ணி யானை

உருமன்ன கூற்றத்தை உருண்டோட உதைத்துகந்

துலவா இன்பம்

தருவானைத் தருமனார் தமர்செக்கி லிடும்போது

தடுத்தாட் கொள்வான்

பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்

பெற்றா மன்றே.

5


'பல்லவர்க்கும்' என உம்மையோடும் ஓதுவாரும் உளர். 'உரிமையால் மறுக்கம் செய்யும்' எனவும், 'செய்யும் பெருமான்' எனவும் இயையும். இதனால், உலகத்தை நன்னெறிக்கண் வைத்து ஆளும் அரசர்க்கு இறைவன் துணைசெய்தல் அருளப்பட்டவாறு அறிக.

5. பொ-ரை: மனமே, யானையினது தோலைப் போர்வையாக உடைய, சிவந்த சடைமேல் வெள்ளிய பிறையாகிய கண்ணியைச சூடினவனும், இடிபோல முழங்கும் கூற்றுவனை நிலத்தில் உருண்டு ஒழியும்படி உதைத்துப் பின் அருள் செய்து, அவனால் வெருட்டப் பட்ட சிறுவனுக்கு அழியாத இன்பத்தைத் தந்தவனும், நம்மை, அக்கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும் ஆகிய, பெருமை நீங்காதவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது!

கு-ரை: 'உலவா இன்பம் பெற்றவர் மார்க்கண்டேயர்' என்பது, வரலாற்றால் இனிது விளங்கிக்கிடப்பது. 'நம்மை' என்பது, மேலைத் திருப்பாடல்களது இயைபினால் விளங்கிற்று. 'அத்தருமனார்' எனச் சுட்டு வருவிக்க. நம்மைக் கூற்றுவன் ஏவலரிடமிருந்து மீட்டுக் காத்தல் திண்ணம் என்பது போதர, மார்க்கண்டேய முனிவரது வரலாற்றை எடுத்துக்காட்டியருளினார். 'பெருமை ஆனார்' என்பதில் ஐகாரம் தொகுத்தல். ஆனாமை - நீங்காமை. "ஆனார்" என, பண்பின் தொழில், பண்பின்மேல் நின்றது. இத்திருப்பாடலின் இரண்டாமடியின் நான்காஞ்சீர், விளமாயிற்று. 'உதைத்துகந்து' என ஒற்றளபெடை