பக்கம் எண் :

1202
 
918.உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய்

ஊன்க ணோட்டம்

எத்தாலுங் குறைவில்லை என்பர்காண் நெஞ்சமே

நம்மை நாளும்

பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி

பாவந் தீர்க்கும்

பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்

பெற்றா மன்றே.

6

919.

முட்டாத முச்சந்தி மூவா யிரவர்க்கும்

மூர்த்தி என்னப்

பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார் பாவமும்

வினையும் போக


கொள்ளினுமாம். 'உதைத்துகந்து வுலவா' எனவும் ஓதுவர்.

6. பொ-ரை: மனமே, படம் எடுத்து ஆடும் பாம்பையும், விரிந்த சடையையும் உடையவனும், மேலான ஒளியாய் உள்ளவனும், அடைந்தவரது பாவங்களை நீக்குகின்றவனும், பித்துக்கொண்டு ஆடுகின்றவனும் ஆகிய, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம் பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே; இனி நாம் பெற வேண்டுவது யாது! இதனால், நமக்கு எதனாலும் குறைவில்லாது வாழ்வு உளதாயிற்று என்று நம்மை நாள்தோறும் பலரும் புகழ்கின்றனர்; ஆதலின், மனமே, இனி நீ, உடம்பின் மேற் கண்ணோட்டம் செலுத்தி அலைந்து திரியாது, அதனை முற்றிலும் ஒழி.

கு-ரை: "கண்டாய்" முன்னிலை அசை. 'எதனாலும் என்பது, 'எத்தாலும்' என மருவிற்று. 'நம்மை நாளும் குறைவில்லை என்பர்' என மேலே கூட்டுக. 'என்பர்' என்றது, 'என்று புகழ்வர்' எனப் பொருள் தந்தது. முன்னைப் பழக்கத்தை அறவே ஒழித்தலை வற்புறுத்துவார், மறித்தும், 'உள்ளமே' என விளித்தார். அதனானே, 'ஒழிந்திலையேல் கெடுவை' என வருவதுணர்த்தலும் பெறப்பட்டது. 'பித்தோடு ஆடி' என, ஒடு உருவு விரிக்க. பேரருள் பித்துப் போறலின், 'பித்து' எனப்படும். "ஆடி" என்றது பெயர். 'உய்த்தாட்டி' என்பதும் பாடம்.

7. பொ-ரை: மனமே, 'தப்பாத, முப்போதும் செய்யும் வழி