| விட்டானை மலைஎடுத்த இராவணனைத் தலைபத்தும் | | நெரியக் காலால் | | தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் | | பெற்றா மன்றே. | | 7 |
920. | கற்றானுங் குழையுமா றன்றியே கருதுமா | | கருத கிற்றார்க் | | கெற்றாலுங் குறைவில்லை என்பர்காண் உள்ளமே | | நம்மை நாளுஞ் |
பாட்டினையுடைய மூவாயிரவர் அந்தணர்க்கும் ஒரு மூர்த்தியே' என்று அனைவராலும் சொல்லப்பட்டவனும், அடியவராய் நின்று தன்னை நினைப்பவரது, பாவமும் புண்ணியமும் ஆகிய இரு வினைகளும் விலகுமாறு நீக்குகின்றவனும், தனது மலையை எடுத்த இராவணனை, அவனது பத்துத் தலைகளும் நெரியும்படி காலால் ஊன்றினவனும் ஆகிய, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச் சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே, இனி நாம் பெறவேண்டுவது யாது! கு-ரை: "முச்சந்தி" அடையடுத்த ஆகுபெயர். 'மூன்று பொழுதும் தவறாது வழிபடும் அந்தணர் மூவாயிரவர்க்கு, வழிபடப் படும் மூர்த்தி ஒருவனேயாதல் வியப்பு' என்பது நயம். 'தில்லை மூவாயிரவர், பிறிதொரு கடவுளை நோக்கார்' என்பது, உண்மைப் பொருள். "பாவமும்" என முன்னர் வந்தமையின், "வினையும்" என்றது, புண்ணியத்தையாயிற்று. "விட்டான்" என்றது, 'விடுவித்தான்' என்னும் பொருளது. ஊன்றியது சிறிதாகலின், "தொட்டான்" என்றார். தொடுதல் - தீண்டுதல். "நெரியத்தான் ஊன்றா முன்னம் நிற்கிலா தலறி வீழ்ந்தான் மரியத்தான் ஊன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே" (தி. 4 ப. 47 பா. 9) என்று அருளிச்செய்தார், நாவரசரும். இத்திருப்பாடலின் முதலடியின் மூன்றாம் சீர், தேமாவாயிற்று. 'மூவாஅ யிரவர்க்கும்' என, உயிரளபெடை கொள்ளினுமாம். 8. பொ-ரை: மனமே, கல்லும் தன் தன்மை மாறி உருகும்படி, தன்னை நினைக்கும் முறையில் நினைக்க வல்லராயினார்க்கு, எத்தன்மைத்தாய
|