பக்கம் எண் :

1204
 
செற்றாட்டித் தருமனார் தமர்செக்கி லிடும்போது

தடுத்தாட் கொள்வான்

பெற்றேறிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்

பெற்றா மன்றே.

8


921.நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ் செய்மனமே

நம்மை நாளும்

தாடுடைய தருமனார் தமர்செக்கி லிடும்போது

தடுத்தாட் கொள்வான்

மோடுடைய சமணர்க்கும் முடையுடைய சாக்கியர்க்கும்

மூடம் வைத்த

பீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்

பெற்றா மன்றே.

9



பொருளாலும் குறைவில்லை என்று பெரியோர் சொல்லுவர்; அவ்வகையில் நாம், நம்மை, கூற்றுவனது ஏவலர்கள் பலகாலும் ஆட்டக்கருதிச் செக்கிலிட முயலும்போது, அதனைத் தடுத்து ஆட்கொள்ளுகின்ற, விடையேறுபவனாகிய, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கும் நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது!

கு-ரை: "கற்றானும்" என்றதில் தான், அசைநிலை; உம்மை இழிவு சிறப்பு. 'அன்றியேகுழையுமாறு' எனக் கூட்டுக. ஏகாரம், தேற்றம். "கருத கிற்றார்" என்பது, இறந்தகால வினைப்பெயர். "ஆட்டி" என்றது, 'ஆட்டக் கருதி' எனப் பொருள் தந்தது. 'பெற்றம்' என்பது ஈறு குறைந்தது.

9. பொ-ரை: மனமே, நம்மை, தலைமையையுடைய கூற்றுவனது ஏவலர் பலநாளும் செக்கிலிட்டு ஆட்ட முயலும்போது, அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும், முடைநாற்றத்தையுடைய சமணர்கட்கும், வயிற்றையுடைய சாக்கியர்கட்கும் அறியாமையை வைத்த பெருமையை யுடையவனும் ஆகிய, பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டியது யாது! அதனால், உயர்ந்தோரால் விரும்பப்டுதலையுடைய அவ்விறைவனிடத்தில் என்றும் நன்றாய தொன்டினைச் செய்.