பக்கம் எண் :

1214
 
934.வழிபோவார் தம்மோடும் வந்துடன்

கூடிய மாணிநீ

ஒழிவ தழகோசொல் லாய்அரு

ளோங்கு சடையானே

பொழிலா ருஞ்சோலைப் புக்கொளி

யூரிற் குளத்திடை

இழியாக் குளித்த மாணிஎன்

னைக்கிறி செய்ததே.

2



கு-ரை: 'ஒருகாரணத்தாலும் மறவேன்' என்பது எதிர்மறை எச்சமாயும், 'யான் இரப்பதனை மறாது அருளல்வேண்டும்' என்பது குறிப்பெச்சமாயும் வந்து இயையும். "எழுமை" என்றது, வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை. அதனை, "எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்" என்னும் திருக்குறளானும் உணர்க (107). அவினாசி - அழியாதது; இத்தலத்தில் உள்ள திருக்கோயிலின் பெயராகிய இஃது ஆகுபெயராய் அதன்கண் இருக்கும் இறைவனைக் குறித்தது. இத்திருப்பாடலின் இரண்டாம் அடியில் ஒருசீர் மிகுந்து வந்தது.

2. பொ-ரை: அருள் மிக்க, தவக்கோலத்தையுடையவனே, பெருமரப் பொழில்களையும், நிறைந்த இளமரக் காக்களையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தின்கண் இறங்கிக் குளித்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் யாது? உன்னை வணங்கச் செல்பவர்களுடன் வந்து உடன் சேர்ந்த அச்சிறுவன், உன் திருமுன்னே இறந்து போவது உனக்குப் பொருந்துவதோ? நீ சொல்லாய்.

கு-ரை: "வழிபோவார்" என்றதனை, ஏழாவதன் தொகையாக வன்றி, இரண்டாவதன் தொகையாகக் கொள்ளுதலும் பொருந்துவதாதல் அறிக. வழிபோவார், தல யாத்திரையை மேற்கொண்டவர். பிறவிடத்தினின்றும் வந்து அவருடன் சேர்ந்து சென்று குளித்த சிறுவர் இருவருள் ஒருவனை முதலை விழுங்கிற்று என்க. 'அம்மாணி' எனச் சுட்டு வருவித்துரைக்க. 'மாமணி நீ' என்பது பாடம் அன்று. 'எவன்' என்னும் வினாப் பெயரின் திரிபாகிய, 'என்னை' என்பதன்முன் வல்லினம் விகற்பிக்கும் என்க. இஃது அறியாதார், அதனை இரண்டன் உருபேற்ற தன்மைப் பெயராகக் கொண்டு, வழிபோவேன் றன்னோடும்' என்னாது, "வழிப்போவார் தம்மோடும்" என்ற