935. | எங்கேனும் போகினும் எம்பெரு | | மானை நினைந்தக்கால் | | கொங்கே புகினுங் கூறைகொண் | | டாறலைப் பார்இலை | | பொங்கா டரவா புக்கொளி | | யூர்அவி னாசியே | | எங்கோ னேஉனை வேண்டிக்கொள் | | வேன்பிற வாமையே. | | 3 |
பாடத்தையும் நோக்காது, சிறுவர் இருவரும், சுவாமிகள் இத் தலத்திற் சென்றபொழுது அவருடன் செல்ல, அவர்களுள் ஒருவனை முதலையுண்டது' எனச் சேக்கிழாரது திருமொழியொடு முரண உரைத்துக் குற்றப்படுவர். 3. பொ-ரை: மிகுதியான, ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எங்கள் தலைவனே, எம்பெருமானாகிய உன்னை நினைத்தால், கொங்கு நாட்டிலே புகுந்தாலும், மற்றும் எங்கேனும் சென்றாலும், என்னை ஆறலைத்துக் கூறையைப் பறித்துக்கொள்பவர் இலராவர்; ஆகவே, உன்னிடம் நான் பிறவாமை ஒன்றையே வேண்டிக் கொள்வேன். கு-ரை: உம்மை இரண்டனுள் முன்னையது முற்று; பின்னையது எதிர்மறை. பிரிநிலை ஏகாரம், இருவகைச் சிறப்பினையும் சிலவிடத்து உணர்த்தும்; ஈண்டு, 'கொங்கே' என்பதில் இழிவு சிறப்பை உணர்த்திற்று. 'கொங்கு நாடு நெறிப்படாதோர் மிக்கது' என்றல் வழக்கு. சுவாமிகளை இறைவர் வழிப்பறி செய்ததும் அந்நாட்டிலே யாதலை நினைக்க. "கூறைகொண்டு ஆறலைப்பார் இலை" என்றதனைப் பின் முன்னாக மாற்றியுரைக்க. 'இம்மையில் எனக்குக் குறையாதும் இல்லை; இனிப் பிறவாமை ஒன்றே வேண்டும்' என்றவாறு. 'சிறுவனை உயிர்ப்பிக்க எழுந்த அவா நிரம்பாதுவிடின், பிறப்பு உளதாம்' என்பது குறிப்பாகக் கொள்க. 'மாணி' என்பதனை மேலைத் திருப்பாடலினின்றும் வருவித்து, 'இறவாமை' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
|