பக்கம் எண் :

1217
 
புரங்கோட எய்தாய் புக்கொளி

யூர்அவி னாசியே

குரங்காடு சோலைக் கோயில்கொண்

டகுழைக் காதனே.

5

938.நாத்தா னும்உனைப் பாடல்அன்

றிநவி லாதெனாச்

சோத்தென்று தேவர் தொழநின்ற

சுந்தரச் சோதியாய்

பூத்தாழ் சடையாய் புக்கொளி

யூர்அவி னாசியே

கூத்தா உனக்குநான் ஆட்பட்ட

குற்றமுங் குற்றமே.

6



கு-ரை: 'உன்னால் ஆகாதது எது' என்பது குறிப்பெச்சம். 'எல்லாம் மாய்' எனப் பிரிக்க. "எல்லாம்" என்னும் பொதுப் பெயர், இங்கு உயர்திணைமேல் நின்றது. 'எல்லாம் ஆய்' எனப்பிரித்து 'எல்லாவற்றினும் தெரிந்தெடுத்த இடுகாடு' என உரைப்பாரும் உளர். 'சரக்கோல்' என்னும் இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் உள்ள ககர ஒற்று எதுகை நோக்கி, மெலிந்து நின்றது. "சரக்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்து" என விதந்தோதியது, 'அவை பிறரால் அங்ஙனம் செயற்படுத்தற்கரிய பொருள்களானவை' என்பது பற்றியாம். 'கோடுதல்' என்பது இங்கு, 'கெடுதல்' என்னும் பொருளது. 'புரங்கெட' என்றேயும் பாடம் ஓதுவர். "அவினாசி" என்றதனை, "கோயில்" என்றதன் பின்னர்க் கூட்டுக.

6. பொ-ரை: 'எங்கள் நாவும் உன்னைப் பாடுதலன்றி வேறொன்றைச் சொல்லாது' என்றும், 'உனக்கு வணக்கம்' என்றும் சொல்லித் தேவர்கள் வணங்க நிற்கின்ற அழகிய ஒளிவடிவாய் உள்ளவனே, பூவையணிந்த, நீண்ட சடையை உடையவனே, நடனம் ஆடுபவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நான் உனக்கு ஆளான தன்மையும் குற்றமோ?