939. | மந்தி கடுவனுக் குண்பழம் | | நாடி மலைப்புறம் | | சந்திகள் தோறுஞ் சலம்புட்பம் | | இட்டு வழிபடப் | | புந்தி உறைவாய் புக்கொளி | | யூர்அவி னாசியே | | நந்தி உனைவேண்டிக் கொள்வேன் | | நரகம் புகாமையே. | | 7 |
கு-ரை: "நாத்தானும்" என்றதில் "தான்" அசைநிலை; உம்மை, எச்சம்; அதனால், 'தலையும் பிறரை வணங்காது; மனமும் வேறொன்றை நினையாது', என்பன தழுவப்படும். இழிந்தோர் கூறும் வணக்கச் சொல்லாகிய, 'சோத்தம்' என்பது, கடைக்குறைந்து நின்றது. "குற்றம்" இரண்டனுள் முன்னது, பொதுமையில் 'தன்மை' என்னும் பொருளதேயாம். அது, 'குற்றம்' எனப் பின்னர்க் குறிக்கப்படுதலின், முன்னரும் அவ்வாறே குறிக்கப்பட்டது. "குற்றமும்" என்ற உம்மை உயர்வு சிறப்பு. 'ஆட்பட்ட பின், விரும்புவதை வேண்டுதல், நிகழவே செய்கின்றது' என்பார், 'உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே' என்று அருளிச் செய்தார். 7. பொ-ரை: பெண்குரங்கு, ஆண்குரங்குக்கு, அது செல்லும் மலைப்புறங்களில், உண்ணத் தக்க பழங்கள் கிடைக்கவேண்டி, 'காலை, நண்பகல், மாலை' என்னும் காலங்கள் தோறும் நீரையும், பூவையும் இட்டு வழிபாடு செய்ய, அதன் மனத்திலும் புகுந்து இருப்பவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற, 'நந்தி' என்னும் பெயரை உடையவனே, உன்னிடம் நான் நரகம் புகாதிருத்தலையே வேண்டிக் கொள்வேன். கு-ரை: 'உணப்பழம்' என்பதும், 'சலபுட்பம்' என்பதும் பாடங்கள். 'புந்தியும்' என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. 'நந்தி' என்னும் வடசொல், 'இன்பம் உடையவன்' எனப் பொருள்படும். நரகம் புகுதல், முதலையால் விழுங்கப்பட்ட சிறுவனுக்கும், புதல்வனை இழந்த தாய் தந்தையருக்கும், அவர்களது துன்பத்தைக் களையாது தமக்கும்
|