940. | பேணா தொழிந்தேன் உன்னைஅல் | | லாற்பிற தேவரைக் | | காணா தொழந்தேன் காட்டுதி | | யேல்இன்னங் காண்பன்நான் | | பூணாண் அரவா புக்கொளி | | யூர்அவி னாசியே | | காணாத கண்கள் காட்டவல் | | லகறைக் கண்டனே. | | 8 |
உளதாகும் எனக் கருதினமையைக் குறிப்பினால் அருளினாராகக் கொள்க. 'முதலையால் விழுங்கப்படுதல் முதலிய வற்றால், பாவங்காரணமாக. வாழ்நாள் இடைமுரியப் பெற்றோரும், புத்திரன் இல்லாதோரும், பிறர் துன்பம் களைதல் இயலும்வழி அது செய்யாதோரும் நரகம் புகுவர்' என்பது அறநூல் துணிபு. 8. பொ-ரை: 'அணிகலமாகவும், வில்நாணாகவும் பாம்பைக் கொண்டுள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் உன்னையன்றிப் பிறதேவரை விரும்பாது நீங்கினேன்; அதனால் அவர்களைக் காணாதும் விட்டேன்; காணும் தன்மையற்ற என் கண்களைக் காணும்படி செய்யவல்ல, நஞ்சினையணிந்த கண்டத்தையுடையவனே, என் அறிவாகிய கண்ணையும் அங்ஙனம் அறியச் செய்வையாயின், உனது பெருமைகளை இன்னும் மிகுதியாக அறிந்து கொள்வேன். கு-ரை: ஒரோவொரு பயனைப்பெற ஒரோவொரு தேவரை அணுகுவோர் போலவன்றி, எல்லாவற்றிற்கும் உன்னையே அடியேன் அணுகுவேன்; நீயும் அங்ஙனம் எனக்கு எல்லாவற்றையும் அளிக்கின்றாய்; இனியும் அளிப்பாய்' என்பது, இத்திருப்பாடலாற்போந்த பொருளாகக் கொள்க. அறிவுக்கண்ணாவது, அனுபவம்; அதனை மேலும் மேலும் பெறவிரும்பி, இறைவன் தமக்குக் கண் அளித்த அருஞ்செயலை எடுத்தோதியருளினார் என்க. "நாண்" என்றது, வில் நாணேயன்றி, அரை நாணுமாம்.
|