பக்கம் எண் :

1220
 
941.நள்ளாறு தெள்ளா றரத்துறை

வாய்எங்கள் நம்பனே

வெள்ளாடை வேண்டாய் வேங்கையின்

தோலை விரும்பினாய்

புள்ளேறு சோலைப் புக்கொளி

யூரிற் குளத்திடை

உள்ளாடப் புக்க மாணியென்

னைக்கிறி செய்ததே.

9

942.நீரேற ஏறு நிமிர்புன்சடை

நின்மல மூர்த்தியைப்

போரேற தேறியைப் புக்கொளி

யூர்அவி னாசியைக்

காரேறு கண்டனைத் தொண்டன்ஆ

ரூரன் கருதிய

சீரேறு பாடல்கள் செப்பவல்

லார்க்கில்லை துன்பமே.

10

திருச்சிற்றம்பலம்


9. பொ-ரை: திருநள்ளாறு, திரு அரத்துறைகளில் உள்ள நம்பனே, வெள்ளாடையை விரும்பாது, புலித்தோல் ஆடையை விரும்புபவனே, பறவைகள் தங்கும் சோலைகளையுடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தில் உள்ளே முழுகப் புகுந்த அந்தணச் சிறுவன் செய்த மாயம் யாது?

கு-ரை: முழுகினவன் விரைவில் எழுந்துவாராது மறைந்திருந்து, சில ஆண்டுகளுக்குப்பின் வந்தமையை, 'மாயம்' என்றார் என்க. இறைவன் செய்த அற்புதச் செயலைச் சிறுவன்மேல் வைத்து வியந்தருளியவாறு. ஐந்தாம் திருப்பாடல் முதலாக வந்த பாடல்கள், முதலையுண்ட பாலன் மீண்டமைக்கு முன்னும் பின்னும் உள்ள இருநிலைகட்கும் இயையப் பொருள் பயந்து நிற்றலை அறிந்து கொள்க.