பக்கம் எண் :

1221
 

10. பொ-ரை: நீர் தங்குதலால் பருமை பெற்ற, நீண்ட புல்லிய சடையை உடைய, தூய பொருளானவனும், போர்செய்யும் எருதை ஏறுபவனும், கருமை பொருந்திய கண்டத்தையுடையவனும் ஆகிய, திருப்புக்கொளியூரிலுள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவனது தொண்டனாகிய நம்பியாரூரன். ஒரு பயன்கருதிப் பாடிய, இப்புகழ்மிக்க பாடல்களைப் பாடவல்லவர்கட்குத் துன்பம் இல்லையாகும்.

கு-ரை: 'பயன், முதலையுண்ட பாலனைப் பெறுதல்' என்பது வெளிப்படை. இவ்வதியற்புதச் செயலைச் செய்தமையின், இப் பாடல்கள் புகழை மிக உடையவாயின. மூவர் முதலிகள் வாயிலாக நிகழ்ந்த அற்புதச் செயல்கள் பலவற்றுள்ளும் இதனையே அதியற்புதச் செயலாகப் பின்னுள்ளோர் ஒருவர் குறித்ததும் நினைக்கத்தக்கது (நால்வர் நான்மணிமாலை - 19). மகனை இழந்த நெடுநாள் வருந்தினோரது வருத்தத்தைப் போக்கிய இப்பாடல்களைப் பாடுவோர்க்கு, ஏனைத் துன்பங்கள் நீங்குதல் சொல்ல வேண்டுமோ என்பது திருவுள்ளம்.

நால்வர் நான்மணிமாலை

 
வாங்குசிலை புரைமுட லெனுங்குளத்தின் மூல

மலமெனுமோர் வெங்கரவின் பகுவாயினின்றும்

தீங்கிலுயி ரெனும்பனவக் குலமகனை ஆதி

திரோதாயி யென்னுமோரு வெந்திறற் கூற்றுவனால்

ஓங்குறுநர் தாந்த மெனப் பெயரியவக் கரையில்

உமிழ்வித்துச் சிவமெனுமோர் தந்தயொடும் கூட்டாய்

கோங்கமுகை கவற்றுமிள முலைப்பரவை மகிழக்

குண்டையூர் நென்மலைமுற் கொண்ட அருட்கடலே

- சிவப்பிரகாசர், பா. 11