பக்கம் எண் :

1222
 

93. திருநறையூர்ச் சித்தீச்சரம்

பதிக வரலாறு:

நம்பியாரூரர், திருவீழிமிழலையினின்று திருவாஞ்சியம் சென்று பணிந்து பாடியபின், திரு அரிசிற்பரைப் புத்தூருக்குச் செல்லும் வழியில் திருநறையூர்ச் சித்தீச்சரத்தை வணங்கிப் பாடியருளியது இத் திருப்பதிகம். (பெ. ஏயர். பு. 61.)

குறிப்பு: இத் திருப்பதிகம், இத்தலத் திருக்கோயில் இறைவனுக்கு இடமாயிருக்கும் சிறப்பினை அருளிச்செய்தது.

பண்: குறிஞ்சி

பதிக எண்: 93

திருச்சிற்றம்பலம்

943.நீரும் மலரும் நிலவும் சடைமேல்
ஊரும் மரவும் உடையான் இடமாம்
வாரும் மருவி மணிபொன் கொழித்துச்
சேருந் நறையூர்ச் சித்தீச் சரமே.

1

944.அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத்
துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம்


1. பொ-ரை: இடையறாது ஒழுகும் நீர்ப்பெருக்கு, மணியையும் பொன்னையுங் கொழித்துக்கொண்டு சேர்கின்ற திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருக்கோயிலே, சடையின்மேல் நீரையும், பல மலர்களையும் பிறையையும் ஊர்ந்து செல்லுகின்ற பாம்பையும் உடையவனாகிய இறைவனது இடமாகும்.

கு-ரை: 'அரவம்' எனப் பாடம் ஓதி, "நிலவும்" என்றதற்கு 'நிலைபெற்ற' என உரைப்பாரும் உளர். 'அருவிபோலக் கடிதாய ஓட்டத்தையுடைய நீர்' என்றற்கு, "அருவி" என்று அருளினார். "நறையூர்" எனப்பட்டது, ஊர்ப்பெயர் எனவும், "சித்தீச்சரம்" எனப்பட்டது கோயிலின் பெயர் எனவும் அறிக.

2. பொ-ரை: வளையையணிந்த கைகளையுடைய இளமகளிர், மிக்க நீரினுள் மூழ்கி இன்புறும் திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருக்கோயிலே, புற்றில் வாழ்கின்ற, படத்தையுடைய பாம்பு போலும்