பக்கம் எண் :

50
 

ஆகிய தருமை ஆதீன 25ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணியதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், சுந்தரர் செந்தமிழ் ஆகிய ஞானக் கருவூலத்தை மன்பதைகள் கற்று உய்யும்பொருட்டு விளக்கவுரைகளுடன் வெளிப்படுத்தி அருளுகிறார்கள்.

தருமபுர ஆதீன வெளியீடுகளாகிய மற்ற ஆறு திருமுறைகளைப் போலவே, இத் திருமுறையும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

வன்றொண்டர் வண்டமிழ் மாலையைப் பக்தர்கள் கற்று பாடி இன்பம் எய்துக!

மேலையார் மேலார் ஆகுக!

28-2-1965.

சிவ சிவ