951. | பேணா முனிவான் பெருவேள் வியெலாம் மாணா மைசெய்தான் மருவும் மிடமாம் பாணார் குழலும் முழவும் விழவில் சேணார் நறையூர்ச் சித்தீச் சரமே. | | 9 |
952. | குறியில் வழுவாக் கொடுங்கூற் றுதைத்த எறியும் மழுவாட் படையான் இடமாம் நெறியில் வழுவா நியமத் தவர்கள் நெறியுந் நறையூர்ச் சித்தீச் சரமே. | | 10 |
கு-ரை: திருநறையூர் அந்தணர்கள் வேதத்தை ஓதுதல், தமக்குத் தம் குரவர் கற்பித்த வைதிகச் செயல்களைச் செய்தல் என்பவற்றையே யன்றி, வேதம் முதலியவற்றின் பொருளை ஆராய்தலும் செய்வர் என்றவாறு. 9. பொ-ரை: பண் நிறைந்த குழல்களின் ஓசையும், மத்தளங்களின் ஓசையும் விழாக்களில் சேய்மைக்கண் சென்று பொருந்துகின்ற திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருக்கோயிலே, தன்னை விரும்பாது வெறுத்தவனாகிய தக்கனது பெருவேள்வியின் சிறப்புக்களை எல்லாம் சிறவாதபடி அழித்தவனாகிய இறைவன் பொருந்தியிருக்கும் இடமாகும். கு-ரை: 'பேணாது' என்பதன் ஈறு கெட்டது. 'முனிவன்' என்பது பாடம் அன்று. வேள்வி, குழல், முழவு, இசை ஆகுபெயர்களாய் நின்றன. 10. பொ-ரை: நன்னெறியினின்றும் வழுவாத கடப்பாட்டினை யுடைய உயர்ந்தோர்கள் மிக்குள்ள திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருக்கோயிலே, கொடிய கூற்றுவனை உதைத்த, குறியினின்றும் தவறாது எறியும் மழுப்படையை உடையவனாகிய இறைவனது இடமாகும். கு-ரை: 'வழுவாது' என்பதன் ஈறு கெட்டது, "கொடுங் கூற்றுதைத்த" என்றதனை, "குறியில்" என்றதற்கு முன்னே கூட்டுக.
|