953. | போரார் புரம்எய் புனிதன் அமரும் சீரார் நறையூர்ச் சித்தீச் சரத்தை ஆரூ ரன்சொல் லிவைவல் லவர்கள் ஏரார் இமையோர் உலகெய் துவரே. | | 11 |
திருச்சிற்றம்பலம்
11. பொ-ரை: போர் செய்தலை உடையவரது முப்புரத்தை அழித்த தூயவனாகிய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற, புகழ் நிறைந்த திருநறையூர்ச் சித்தீச்சரத்தை நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாட வல்லவர்கள், எழுச்சிபொருந்திய தேவருலகத்தை அடைவார்கள். கு-ரை: "சொல் இவை" என்றது வினைத் தொகை. சுந்தரர் அற்புதங்கள் | | வெங்கரா வுண்ட பிள்ளையை நல்குமே | வெள்ளை யானையின் மீதேறிச் செல்லுமே | மங்கை பாகனைத் தூது நடத்துமே | மருவியாறு வழிவிட நிற்குமே | செங்க லானது தங்கம தாக்குமே | திகழும் ஆற்றிட்டுச் செம்பொன் எடுக்குமே | துங்க வான்பரி சேரற்கு நல்குமே | துய்ய நாவலூர்ச் சுந்தரர் பாடலே. | | - தனிப்பாடல் |
|