பக்கம் எண் :

1232
 
960.இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப்
புறங்காட் டாடும் புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றந் திருவென் றின்ன
துறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே.

7

961.காமன் பொடியாக் கண்ஒன் றிமைத்த
ஓமக் கடலார் உகந்த இடமாம்
தேமென் குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்பார் சோற்றுத் துறையே.

8

 

962.இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்


7. பொ-ரை: உயிர்போலச் சிறந்த மனைவி மக்களும், ஏனைய சுற்றத்தாரும், செல்வமும் என்று சொல்லப்பட்ட இன்னோரன்ன வற்றைத் துறந்த ஞானியர் சேர்கின்ற, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே, இறந்தவரது எலும்புகளையும்' எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு, புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம்.

கு-ரை: 'புறங்காட்டில் ஆடினும் தூயவனே' என்பார், 'புறங்காட்டாடும் புனிதன்' என்று அருளினார். 'சுற்றம்' என்பது சொல்லால் அஃறிணை முடிபு கொடுக்கப்பட்டது.

8. பொ-ரை: தேன் பொருந்திய, மெல்லிய கூந்தலையுடைய மகளிர், தம் இருக்கையில் இட்ட நறும்புகைகள், வானத்தில் சென்று நிறைகின்ற, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே மன்மதன் சாம்பராகுமாறு கண் ஒன்றைத் திறந்த, வேள்வியாகிய கடலையுடைய வராகிய இறைவர் விரும்பும் இடமாகும்.

கு-ரை: "ஓமக் கடல்" உருவகம். 'வேள்விகள் எல்லாவற்றிலும் முதற்கண் வழிப்படப்படும் முதல்வர்' என்றவாறு.

9. பொ-ரை: தன்னைத் தலையால் வணங்குகின்ற தவத்தினை உடையோர்க்கு, எஞ்ஞான்றும் அழியாத செல்வத்தைத் தரும், 'திருச்சோற்றுத்துறை' என்னுந் தலமே, இலையாலாயினும் அன்போடு துதிக்கின்ற அவர்கட்கு, நிலையாத இவ்வுலக வாழ்வை நீக்குபவராகிய இறைவனது இடமாகும்.