| தலையால் தாழுந் தவத்தோர்க் கென்றும் தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே. | | 9 |
கு-ரை: "இலை" என்றது அதனைத் தூவுதலைக் குறித்தது. "இலையால்" என்றவிடத்து, 'ஆயினும்' என்பது எஞ்சி நின்றது; அதனால், 'பூவைத் தூவித் துதித்தலே செய்யத்தக்கது' என்பது பெறப்படும். "என்போ லிகள்பறித் திட்ட இலையும் முகையுமெல்லாம் அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே"
(தி. 4 ப. 92 பா. 10) "போதும் பெறாவிடிற் பச்சிலை யுண்டு புனலுண்டெங்கும் ஏதும் பெறாவிடில் நெஞ்சுண் டன்றே" (தி. 11 திருவிடைமருதூர்மும்மணிக் கோவை-19) என்றாற்போலும் திருமொழிகளால், பூக்கொண்டு வழிபடுதலே சிறந்ததாதல் அறியப்படுமாறு உணர்க. "போதும்" என்றதில் உள்ள உம்மை, 'அரியவனாய இறைவனை மலராய் எளியவனாகப் பெறலாம்' என்பதை விளக்குவதாம். "நொச்சி யாயினுங் கரந்தை யாயினும் பச்சிலை யிட்டுப் பரவுந் தொண்டர்"
(தி. 11 திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 19) என்றதும், பச்சிலையாதற்கண் சிறந்தன சிலவற்றை அருளியவாறே யாம் என்க. "நிலையா வாழ்வை நீத்தார்" என்றது, நிலைத்த வாழ்வை அளித்தார்' என்னும் கருத்துடையதாம். "தாழும்" என்ற பெயரெச்சம் "தவத்தோர்" என்றதில் உள்ள, 'தவம்' என்பதனோடு முடிந்தது. தாழுதலையே, "தவம்" என்றாராகலின், பெயரெச்சம், தொழிற்பெயர் கொண்டு முடிந்ததாம். "செல்வச் சோற்றுத்துறை" என்ற, இரண்டாவதன் பெயர்த் தொகையை, இவ்விடத்திற்கு ஏற்ற பெற்றியான் விரிக்க. முன்னர், "நிலையாவாழ்வை நீத்தார் இடம்" என்றதனால், பின்னர், "தொலையாச் செல்வம்" என்றது, உலகச் செல்வத்தையேயாம். ஆகவே, திருச்சோற்றுத்துறையை அடைந்தவர், இருவகைச் செல்வத்தையும் பெறுதல் பெறப்பட்டது. 'சோற்றுத்துறை' என்னும் பெயரும் குறிக்கொளத்தக்கது. 'சோறு' என்பது, வீடுபேறும் ஆதலை,
|