963. | சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுள் முற்றா மதிசேர் முதல்வன் பாதத் தற்றார் அடியார் அடிநாய் ஊரன் சொற்றான் இவைகற் றார்துன் பிலரே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
"பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்"
(தி. 8 திருவா. திருத்தோ. 7) என்பதனாலும் அறிக. இறைவனது ஆணையால் தலங்களும் தம்மை அடைந்தோர்க்குப் பயன்தரும் என்க. 'தவத்தோர் என்றும் தொலையா' என்பதும் பாடம். 10. பொ-ரை: பற்றற்றவராகிய அடியார்களது அடிக்கு நாய் போலும் நம்பியாரூரன், சுற்றிலும் நிறைந்த நீரையுடைய திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளியிருக்கின்ற, இளமையான சந்திரனைச் சூடிய முதல்வனது திருவடிக்கண் இப்பாடல்களைப் பாடினான்; இவைகளைக் கற்றவராவார், யாதொரு துன்பமும் இல்லாதவராவர். கு-ரை: "சேர்முதல்வன்", பிறவினை வினைத்தொகை. தன்வினையெனினும் இழுக்காது. "இவை" என்றது தாப்பிசையாய், "சொற்றான்" என்றதற்கு முன்னும் சென்று இயையும். இவ்வாறன்றி, 'சொல் தான்' எனப் பிரித்து 'பாதத்து' என்புழி, 'சொற்ற ' என்பதனை வருவித்து, "தான்" என்றதனை அசைநிலையாக்கி உரைத்தலுமாம். இவ்வுரைக்கு, 'சொல்' என்பது, சொல்லுதற் கருவியாகிய, 'வாக்கு' என்னும் பொருளதாய், ஆகுபெயரால், பாடல்களைக் குறித்தது எனப்படும். "கற்றார்" என்றது, எதிர் காலத்துக்கண் வந்த இறந்த காலம். இறந்த காலமும், எதிர்காலமும் இங்ஙனம் மயங்கி வருதலை, 'நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான், பின் நீ என் செய்வை' என்றாற்போலும் எடுத்துக்காட்டுக்களான் அறிக.
|