95. திருவாரூர் பதிக வரலாறு: சுவாமிகள், திருத்துருத்தியிலிருந்து திருவாரூருக்கு எழுந்தருளி, பரவையுண்மண்டளிப் பெருமானைப் பணிந்து, "தூவாயா" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி, பின்னர், திரு மூலட்டானரை வழிபட அர்த்தயாம வழிபாட்டிற்குச் செல்லும் பொழுது, அன்பர்கள் எதிரணையக்கண்டு அயலார் வினவுவது போல, "குருகுபாய" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி, திருத்தேவாசிரியன்முன் வணங்கி, கோபுரத்தைக் கைதொழுது, உள்புகுந்து, பூங்கோயிலை வணங்கி, அவனியில் வீழ்ந்து எழுந்து தொழுது, "ஆழ்ந்த துயர்க்கடலிடை நின்றடியேனை எடுத்தருளிக் கண்தாரும்" எனத் தாழ்ந்து, திரு மூலட்டானம் சேர்பிஞ்ஞகனைக் கண்களாற் பருகுதற்கு, 'மற்றைக்கண் தாரீர்' என வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 304.) இதில் பாடல் தோறும் 'வாழ்ந்து போதீர்' என்று கூறியுள்ள தோழமை கருதத்தக்கது. குறிப்பு: இத் திருப்பதிகம் நுதலிய பொருள், இதன் வரலாற்றானே விளங்கும். பண்: செந்துருத்தி பதிக எண்: 95 திருச்சிற்றம்பலம் 964. | மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் | | பிறரை வேண்டாதே | | மூளாத் தீப்போல் உள்ளே கனன்று | | முகத்தால் மிகவாடி | | ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் | | அல்லல் சொன்னக்கால் | | வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் | | வாழ்ந்து போதீரே. | | 1 |
1. பொ-ரை: திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானிரே, உம்மையன்றிப் பிறரை விரும்பாமலே, உமக்கே என்றும் மீளாத அடிமை
|