965. | விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் | | விரும்பி ஆட்பட்டேன் | | குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை | | கொத்தை யாக்கினீர் | | எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் | | நீரே பழிப்பட்டீர் | | மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் | | வாழ்ந்து போதீரே. | | 2 |
செய்கின்ற ஆட்களாகி, அந்நிலையிலே பிறழாதிருக்கும் அடியார்கள், தங்கள் துன்பத்தை வெளியிட விரும்பாது, மூண்டெரி யாது கனன்று கொண்டிருக்கின்ற தீயைப்போல, மனத்தினுள்ளே வெதும்பி, தங்கள் வாட்டத்தினை முகத்தாலே பிறர் அறியநின்று பின்னர் அத்துன்பம் ஒருகாலைக் கொருகால் மிகுதலால் தாங்க மாட்டாது, அதனை, உம்பால் வந்து வாய்திறந்து சொல்வார்களாயின், நீர் அதனை கேட்டும் கேளாததுபோல வாளாவிருப்பீர்; இஃதே நும் இயல்பாயின், நீரே இனிது வாழ்ந்துபோமின்! கு-ரை: இடையில் வருவித்துரைத்தனவெல்லாம் இசையெச்சங்கள். அடியார்களது அடிமைத் தன்மையை வகுத்தருளிச் செய்தது. அவர்க்கு அருள்செய்தல், இறைவர்க்கு இன்றியமையாக்கடனாதலை வலியுறுத்தற்கு. அல்லலை வெளியிற்சொல்லி முறையிடுதல், தீ, சுடர் விட்டு எரிவது போலும் ஆகலின், வெளியிடாது நெஞ்சொடு நோதலுக்கு அவ்வாறு எரியாது கனலும் தீ உவமையாயிற்று. கனலுதல், பொதுத்தன்மையாம். "வாடுதல்" என்றது, வாட்டத்தினைப் புலப்படுத்துதலை. "ஆளாய் இருக்கும் அடியார்" என்றதனை "வேண்டாதே" என்றதன்பின்னர்க் கூட்டுக. 'வாளாஆங்கு' என்பது குறைந்து நின்றது. ஆங்கு, அசைநிலை. "வாழ்ந்துபோதீர்" என்றதில் போதல், துணை வினை. 'நீரே வாழ்வீராக' என்றது, 'அடியவர் கெடினும் கெடுக; நீர் கேடின்றி வாழ்மின்' என்றதாம். எனவே, இது, அடியவரது கேட்டின் துணிவுபற்றி அவர் வாழ்வின்கண் எழுந்த வருத்தத்தால், வந்தது என்பது விளங்கும். நொந்து அருளுகின்றார். ஆதலின், "அடியார்" என, தம்மையே பிறர்போல அருளிச் செய்தார் என்க. 2. பொ-ரை: அடிகளே, நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர்; ஏனெனில், யான் உமக்கு ஒற்றிக் கலம் அல்லேன்; உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையும் பட்டேன்; பின்னர் யான்
|