பக்கம் எண் :

1239
 
969.தினைத்தாள் அன்ன செங்கால் நாரை

சேருந் திருவாரூர்ப்

புனத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப்

புரிபுன் சடையீரே

தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து

தங்கண் காணாது

மனத்தால் வாடி அடியார் இருந்தால்

வாழ்ந்து போதீரே.

6



கு-ரை: "பவளம்". உவமையாகுபெயர், 'இந்திரகோபம்' என்பது ஒருவகைவண்டு. "இதுவே" என்ற ஏகாரம், வினா, 'ஆறு' என்பது, 'பயன்' எனப் பொருள்தந்தது, "அறத்தாறிது வென வேண்டா" (குறள் - 37. ) என்பதிற்போல, 'பலவற்றாலும்' என மூன்றனுருபு விரிக்க. 'பலவற்றையும் உம்மேல் பாடும்' எனினுமாம். "என்றால்" என்றது, 'என்னா நின்றால்' என்னும் பொருளது.

6. பொ-ரை: தினையது தாள்போலும் சிவந்த கால்களையுடைய நாரைகள் திளுகின்ற திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற, முல்லை நிலத்தில் உள்ள கொன்றையினது மலரால் ஆகிய பொன்மாலை போலும் மாலையை அணிந்த, திரிக்கப்பட்ட புல்லிய சடையை யுடையவரே, உம் அடியவர், தாம் பொருளில்லாமையால் இன்றி, தங்கள் கண் காணப்பெறாது வருந்தி, மனத்தினுள்ளே வாட்ட முற்றிருப்பதனால், நீரே இனிது வாழ்ந்து போமின்!

கு-ரை: "தினைத்தாளன்ன" என்னும் உவமையது மரபினை,

"தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதாம் மணந்த ஞான்றே"

- குறுந்தோகை, 25

என்பதனான் அறிக. "புனம்" என்றது, முல்லை நிலத்தை, "பொன்", ஆகுபெயர். 'பொருளின்மையால் வருந்தினும் பெரிதன்று; கண்ணின்மையால் வருந்துதலைத் தீர்க்க வேண்டாவோ?' என்றவாறு. "தாம்" இரண்டனுள், பின்னையது அசைநிலை.