பக்கம் எண் :

1240
 
970.ஆயம் பேடை அடையுஞ் சோலை

ஆரூ ரகத்தீரே

ஏயெம் பெருமான் இதுவே ஆமா

றுமக்காட் பட்டோர்க்கு

மாயங் காட்டிப் பிறவி காட்டி

மறவா மனங்காட்டிக்

காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால்

வாழ்ந்து போதீரே.

7

 

971.கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்

கலந்த சொல்லாகி

இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை

இகழா தேத்துவோம்

பழிதா னாவ தறியீர் அடிகேள்

பாடும் பத்தரோம்

வழிதான் காணா தலமந் திருந்தால்

வாழ்ந்து போதீரே.

8

 

7. பொ-ரை: ஆண் பறவைக் கூட்டம், பெண் பறவைக் கூட்டத்துடன் வந்து சேர்கின்ற சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்றவரே, எங்களுக்குப் பொருந்திய பெருமானிரே, உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன் இதுதானோ? நீர் எனக்கு உம்மை மறவாத மனத்தைக் கொடுத்து, பின்பு ஒரு மாயத்தை உண்டாக்கி, அது காரணமாகப் பிறவியிற் செலுத்தி, உடம்பைக் கொடுத்து, இப்போது கண்ணைப் பறித்துக்கொண்டால், நீரே இனிது வாழ்ந்துபோமின்!

கு-ரை: "பேடை" என்றதனால், 'ஆண்பறவை' என்பது பெறப்பட்டது; அவற்றை, "ஆயம்" என்றதனால், "பேடை" என்றதும் அன்னதாயிற்று. மறவாமனம் காட்டியது, திருக்கயிலையில் அணுக்கத் தொண்டராகச் செய்தது எனவும், மாயங்காட்டியது, மாதர்மேல் மனம் போக்கச் செய்தது எனவும் கொள்க.

8. பொ-ரை: அடிகளே, யாங்கள் இழிவில்லாத உயர்குலத்திலே பிறந்தோம்; அதற்கேற்ப உம்மை இகழ்தல் இன்றி, நீர், கழியும், கடலும், மரக்கலமும் நிலமுமாய்க் கலந்து நின்ற தன்மையைச் சொல்லும்