பக்கம் எண் :

1241
 
972.பேயோ டேனும் பிரிவொன் றின்னா

தென்பர் பிறரெல்லாம்

காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ

கருதிக் கொண்டக்கால்

நாய்தான் போல நடுவே திரிந்தும்

உமக்காட் பட்டோர்க்கு

வாய்தான் திறவீர் திருவா ரூரீர்

வாழ்ந்து போதீரே.

9

 

சொற்களையுடையேமாய்த் துதிப்போம்; அவ்வாறாகலின் எம்மை வருத்துதலால் உமக்குப் பழி உண்டாதலை நினையீர்; அதனால், உம்மைப்பாடும் அடியேமாகிய யாங்கள், வழியைக் காணமாட்டாது அலைந்து வாழ்வதாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்!

கு-ரை: கலந்த சொல் - கலந்ததாகிய பொருளைச சொல்லும் சொல், எனவே, சொல்லொடு பொருட்கு உள்ள ஒற்றுமை கருதி, "கலந்த சொல்" என அருளியவாறாம். சொல்லைஉடைய தம்மை, "சொல்" என்றது, ஆகுபெயர், 'கழிந்த சொல்லாகி' என்பதும் பாடம். "உயர்குலம்" என்றது, ஆதி சைவ குலத்தை, தமக்கு வந்த துன்பத்தைத் தம்மைப் போலும் அடியார் பலர்க்கும் வந்ததாக வைத்து அருளிச்செய்தார் என்க.

9. பொ-ரை: திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே, விரும்பப்பட்டது காயே எனினும், விரும்பிக் கைக் கொண்டால், அது கனியோடொப்பதேயன்றோ? அதனால் உம்மைத் தவிரப் பிறரெல்லாம், பேயோடு நட்புச்செய்யினும், பிரிவு' என்பதொன்று துன்பந்தருவதே என்று சொல்லி, அதனைப்பிரிய ஒருப்படார், ஆனால், நீரோ, உமது திருவோலக்கத்தின் நடுவே நாய்போல முறையிட்டுத் திரிந்தாலும், உமக்கு ஆட்பட்டவர்கட்கு, வாய்திறந்து ஒருசொல் சொல்லமாட்டீர்; இதுவே உமது நட்புத் தன்மையாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்!

கு-ரை: 'வேண்டிற்று' என்பது, குறைந்து நின்றது. 'வேண்டிற்றுக் காய்தான்' என மாற்றி, அதன்பின், 'எனினும்' என்பது வருவிக்க. "நடுவே" என்றது. 'உம் கண்முன்னே' என்றவாறு. 'இரக்க மில்லாதோரும் பிறர் துன்புறுவதனைக் கண்முன் காணின், இரக்கம் உடையவராவர்; நீர் அதுதானும் இல்லீர்' என்றபடி.