பக்கம் எண் :

1242
 
973.செருந்தி செம்பொன் மலருஞ் சோலை

இதுவோ திருவாரூர்

பொருந்தித் திருமூ லட்டா னம்மே

இடமாக் கொண்டீரே

இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை

இகழா தேத்துவோம்

வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால்

வாழ்ந்து போதீரே.

10

974.காரூர் கண்டத் தெண்டோள் முக்கண்

கலைகள் பலவாகி

ஆரூர்த் திருமூ லட்டா னத்தே

அடிப்பேர் ஆரூரன்.



10. பொ-ரை: திருமூலட்டானத்தையே பொருந்தி இடமாகக் கொண்டவரே, இது, செருந்தி மரங்கள், தமது மலர்களாகிய செம் பொன்னை மலர்கின்ற திருவாரூர்தானோ? இருத்தல், நிற்றல், கிடத்தல் முதலிய எல்லா நிலைகளினும்' உம்மை இகழாது துதிப்பேமாகிய யாம், உம்பால் வருத்தமுற்று வந்து, ஒரு குறையை வாய்விட்டுச் சொன்னாலும், நீர் வாய்திறவாதிருப்பிராயின், நீரே இனிது வாழ்ந்து போமின்!

கு-ரை: "செம்பொன்" என்றது, சிறப்புருவகம், 'மலர்தல், காய்த்தல்' என்றாற்போல்வன, மலரைத் தோற்றுவித்தல், காயைத் தோற்றுவித்தல்' என்னும் பொருளவாய், செயப்படுபொருள் குன்றா வினையாம். "வந்தும்" என்ற உம்மையை மாற்றியுரைக்க. "வாய் திறவீர்" என்பது, மேலைத் திருப்பாடலினின்றும் வந்து இயைந்தது.

11. பொ-ரை: பல நூல்களும் ஆகி, கருமை மிக்க கண்டத்தையும், எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடைய, திருவாரூர்த் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற கச்சுப்பொருந்திய தனங்களையுடையவளாகிய உமாதேவியது பாகத்தைக் கொண்டவரே, இவ்வுலகில் உள்ள ஊரெல்லாம் அறிய, நீர், உமது திருவடிப் பெயரைப் பெற்ற நம்பியாரூரனாகிய எனது கண்ணைப் பறித்துக் கொண்டீர்; அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர்; இனி நீர் இனிது வாழ்ந்து போமின்!