பக்கம் எண் :

1243
 
பாரூர் அறிய என்கண் கொண்டீர்

நீரே பழிப்பட்டீர்

வாரூர் முலையாள் பாகங் கொண்டீர்

வாழ்ந்து போதீரே.

11

திருச்சிற்றம்பலம்


கு-ரை: "எண்டோள்முக்கண்" என்ற உம்மைத் தொகைச் சொல், "கொண்டீர்" என்ற வினைப்பெயரோடு, இரண்டாவதன் தொகைபடத் தொக்கது. அவற்றது இடையே, "திருமூலட்டானத்து" என்றது நின்று, ஏழாவதன் தொகையாயிற்று. 'கலைகள் பலவாகி, முக்கண், மூலட்டானத்துப் பாகங்கொண்டீர், ஊரறிய, ஆரூரன் என்கண் கொண்டீர்; பழிப்பட்டீர்; வாழ்ந்துபோதீர்; எனக் கொண்டு கூட்டியுரைக்க. தம் பெயரைப் பெய்தருளிச் செய்தமையின், இது திருக்கடைக் காப்பாயிற்று. இதன் பின்னர், இறைவர், சுவாமிகள் பெருமகிழ்வெய்துமாறு கண்ணளித்தருளினமையை அறிந்துகொள்க.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்

 
மீளா அடிமை என்றெடுத்து

மிக்க தேவர் குலமெல்லாம்

மாளா மேநஞ் சுண்டருளி

மன்னி யிருந்த பெருமானைத்

தாளா தரிக்கும் மெய்யடியார்

தமக்காம் இடர்நீர் தரியீர்என்று

ஆளாந் திருத்தோ ழமைத்திறத்தால்

அஞ்சொல் பதிகம் பாடினார். 

309

-தி. 12 சேக்கிழார்.