பக்கம் எண் :

1245
 
976.பொன்னானே புலவர்க்கு நின்புகழ் போற்றலாம்
தன்னானே தன்னைப் புகழ்ந்திடுந் தற்சோதி
மின்னானே செக்கர்வா னத்திள ஞாயி
றன்னானே பரவையுண் மண்டளி அம்மானே.

2



எனவும் பாடம் ஓதுவர். "கண்டு கொண்டார்", முற்றெச்சம். ஐவர் - ஐம்புலன்கள். 'நாவாய்' என விதந்தோதியது, அவையிரண்டும் பிறிதொன்றைச் சொல்ல முயலாமையை விளக்குதற் பொருட்டு நல்லன, பலருக்குச் செய்த திருவருட் செயல்கள். "சொல்லுதல்" என்றது, 'சொல்லிப் புகழ்தல்' எனப் பொருள் தந்தது. "என்" என்றது, தன் காரியத்தின்மேல் நின்றது.

2. பொ-ரை: பொன்போலச் சிறந்தவனே, தன்னாலே தன்னைப் புகழ்கின்ற, தானே விளங்குவதோர் ஒளியானவனே, ஒரோவொரு கால் தோன்றி மறைதலால் மின்னலொடு ஒப்பவனே, செக்கர் வானத்தில் தோன்றும் இளஞ்சூரியன் போலும் திருமேனியை உடையவனே, திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளி இருக்கின்ற தலைவனே, நின் புகழை எடுத்துரைத்தல், ஞானியர்க்கு இயல்வதாம்,

கு-ரை: "ஆம்" என்றது, 'சிறிதேனும் இயல்வதாம், என்றபடி. "தன்னானே தன்னைப் புகழ்ந்திடும் சோதி" என்றது, "புகழ்வோனும் நீயே; புகழப்படுபவனும் நீயே' என்றவாறு. இறைவனையின்றி யாதொரு பொருளும் இல்லையாகலின். அவன் புகழ்வோனாகியும் நிற்குமாறு அறிக, இவ்வுண்மை உணர்ந்தவர்கட்கே, 'நான்' என்னும் தற்போதம் நீங்குவதாம், இதன் பொருட்டே, சிவபூசையின் முடிவில் செபம், கன்மம் முதலியவற்றைச் சிவபெருமானுக்குத் தானம் செய்யும் மந்திரத்துள், 'கொடுப்பவனும் சிவனே' அனுபவிப்பவனும் சிவனே' என்பன முதலியவற்றோடு, 'வழிபடுபவனும் சிவனே' எனக் கூறப்படுகின்றது. அதனையே,


"பூசையும் பூசைக் கேற்ற பொருள்களும் பூசை செய்யும்
நேசனும் பூசை கொண்டு நியதியிற் பேறு நல்கும்
ஈசனும் ஆகிப் பூசை யான்செய்தேன் எனும்என் போத
வாசனை யதுவு மான மறைமுத லடிகள் போற்றி

-திருவி. புரா. இந்திரன் பழிபடலம்-பா. 90

எனத் திருவிளையாடற் புராணமுடையார் கூறினார், முன்னர் வேறொன்றாக