பக்கம் எண் :

1246
 
977.நாமாறா துன்னையே நல்லன சொல்லுவார்
போமாறென் புண்ணியா புண்ணிய மானானே
பேய்மாறாப் பிணமிடு காடுகந் தாடுவாய்க்
காமாறென் பரவையுண் மண்டளி அம்மானே.

3

978.நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமைக்
காக்கின்றார் கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
வாக்கென்னும் மாலைகொண் டுன்னை என்மனத்
தார்க்கின்றேன் பரவையுண் மண்டளி அம்மானே.

4



வைத்து விளங்கி, பின்னர், அதுவாய் உள்ளவனே என்றமையின், "தன்னானே தன்னை" என்றதில், இடவழுவின்மை உணர்க. இனி, இவ்வாறன்றி, "ஆம்" என்றதனைப் பெயரெச்சமாக்கி, 'தன்மையானே' என்பது, "தன்னானே" என நின்றது எனக் கொண்டு, 'புலவர்க்கு நின்புகழ் போற்றலாமளவே புகழ்ந்திடும் சோதி' என்றுரைத்தலுமாம். இதற்கு, மேலைத் திருப்பாடலில் உள்ள, "ஆவா என்" என்பது இறுதியின் இயைத்துரைக்கப்படும்.

3. பொ-ரை: புண்ணியத்தின் பயனாயும், புண்ணியமாயும் உள்ளவனே, திருப்பரவையுண்மண்டளியுள் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, நீ அருளாதுவிடின், நாப்பிறழாது உன்னையே நல்லனவற்றாற் புகழ்கின்றவர்கள் போவது எவ்வாறு? பேய்கள் நீங்காத, பிணத்தை இடுகின்ற காட்டில் விரும்பி ஆடுகின்ற உனக்கு அடியவராதல் எவ்வாறு?

கு-ரை: 'நீ அருளாதுவிடின்' என்பது, "போமாறென், ஆமாறென்" என்ற குறிப்பால் விளங்கும்.

4. பொ-ரை: திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, ஐவர் என்னை நல்லனவற்றை நோக்காது குறிக்கொண்டு காக்கின்றார். அவ்வாறு காத்து நிற்பினும், சொல்லென்னும் மாலையால், உன்னை என் மனத்தில் இருத்துகின்றேன்; உன்னையே நினைக்கின்றேன்.

கு-ரை: 'என்னை இவ்வாறு வருத்துதல் முறையோ' என்பது குறிப்பெச்சம். 'நோக்காமைக் காக்கின்றாய்' என்பதும் பாடம்.