979. | பஞ்சேரும் மெல்லடி யாளையொர் பாகமாய் நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே நெஞ்சேர நின்னையே உள்கி நினைவாரை அஞ்சேலென் பரவையுண் மண்டளி அம்மானே. |
980. | அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும் பெம்மானே பேரரு ளாளன் பிடவூரன் தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர் அம்மானே பரவையுண் மண்டளி அம்மானே. |
5. பொ-ரை: செம்பஞ்சு காணப்படும் மெல்லிய அடிகளை யுடையவளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, நஞ்சு காணப்படும், நல்ல நீலமணி போலும் கண்டத்தை உடையவனே, திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, உன்னை நெஞ்சில் விளங்கும்படி அழுந்தி நினைக்கின்ற அடியார்களை, 'அஞ்சேல்' என்று சொல்லிக் காத்தருள். கு-ரை: ஏர்தல் - எழுதல், அழுந்தி நினைத்தல் - மறவாது நினைத்தல். "நினைவார்" என, தம்மையே பிறர்போல அருளினார் என்க. 6. பொ-ரை: யாவர்க்கும் தலைவனே, ஆகம ஒழுக்கத்தை உடையவர்கட்கு, உனது திருவருளைத் தருகின்ற பெரியோனே, திருப்பிடவூரில் உறையும் பேரருளாளனுக்குத் தலைவனே, தண்ணிய தமிழால் இயன்ற நூல்களை வல்ல புலமை வாழ்க்கை உடையவர்க்கு, ஒப்பற்ற முதல்வனே, திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனே, உன்னை மறவாது நினைக்கின்ற அடியார்களை 'அஞ்சேல்' என்று சொல்லிக் காத்தருள். கு-ரை: 'அம்மான்' என்பது, மூன்றிடத்தும், குறிப்பாகவும், வெளிப்படையாகவும் வேறு வேறு அடைமொழியோடு நிற்றலின், கூறியது கூறல் ஆகாமை யறிக, ஆகமம் - சைவாகமம். அதன் ஒழுக்கம், சிவபெருமான் ஒருவனையே முதல்வனாக உணர்ந்து, 'சரியை, கிரியை, யோகம், ஞானம்' என்னும், நான்கு நிலைகளில் இயன்றவகையால் அவனை வழிபடுதல். சேரமான் பெருமாள் நாயனார் திருக்கயிலையில் இறைவன் திருமுன் கேட்பித்த ஞானவுலாவை, மாசாத்தனார், திருப்பிடவூரில் கொணர்ந்து
|