நிலவுலகிற்கு அளித்தமை பெரிய புராணத்தால் அறியப்படுதலால், மாசாத்தனார், திருப்பிடவூரில் தொன்மையாகவே கோயில் கொண்டிருந்தமை பெறப்படும், ஆகவே, "பேரருளாளன் பிடவூரன்" எனச் சுவாமிகள் அருளிச் செய்தது, மாசாத்தனாரையே என்பது உணரலாகும், அன்றி, இதற்குப் பொருந்தும் பொருள் வேறு உண்டேனும் கொள்க. இத் தொடரும் இறைவனையே குறித்து வந்த அண்மை விளிப்பெயர்களாக உரைப்பாரும் உளர். புலவாணர் - புலமை வாழ்க்கை யுடையவர்; புலவர். முதனூலைச் செய்தளித்தலின், இறைவன் அவர்கட்கு முதல்வனாயினான் என்க. இடைக்காலத்தும், பொருளதிகாரம் ஒன்று செய்தளித்தமை பற்றிச் சேக்கிழார், இறைவனை, "நூலின்கட் பொருள்பாடி நூலறிவார்க் கீந்தானை"
(தி. 12. திருஞான. புரா. 883.) என்று அருளினார். இன்னும், தமிழ் ஆராயப்பட்ட சங்கங்கள் மூன்றனுள், சிவபெருமான் முதற்சங்கத்து வீற்றிருந்தமை பற்றி அவர், அப்பெருமானை, "தலைச்சங்கப் புலவனார்" என்றும் அருளிச் செய்தார் (தி. 12 திருஞான - 667.) இதனை, சுவாமிகள் எடுத்தோதியது, தாமும் அருள் நெறிப் புலவாணராயினமை பற்றி என்க, "நின்னையே உள்கி நினைவாரை அஞ்சேலென்" என்பதனை, மேலைத் திருப் பாடலினின்றும் கொள்க. 7. பொ-ரை: 'மேல் உள்ளார்க்கு மேல் உள்ளார்க்கு மேல் உள்ள வானம், எண், எழுத்து, சொல், பொருள் மற்றும் எல்லாவற்றையும் முதலிற் படைத்தவனே, வானுலகத்தில் உள்ளவனே, திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, முன்பு என் கண்ணைக் கொண்டாய்; இப்பொழுது அதனைக் கொடுத்து உன்னைக் காட்டியருள். கு-ரை: "விண்தானே, எண்தானே" என்றவற்றில் உள்ள "தான்" அசைநிலை. ஏகாரங்கள், எண்ணிடைச்சொல், மேலையார், பிரகிருதி மாயைக்கு உட்பட்ட விண்ணவர், அவர்கட்கு மேல் உள்ளவர், அசுத்த
|