பக்கம் எண் :

1250
 
983.செடியேன்நான் செய்வினை நல்லன செய்யாத
கடியேன்நான் கண்டதே கண்டதே காமுறும்
கொடியேன்நான் கூறுமா றுன்பணி கூறாத
அடியேன் நான் பரவையுண் மண்டளி அம்மானே.

9

 

984.

கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி அம்மானை


கு-ரை: 'கண்தனைக் கண்டாய்' என்பதனை, மேலைத் திருப்பாடலினின்றும் வருவித்து முடிக்க, கூறு - பகுதி; இனம்.

"வாயாரத்தன்னடியே பாடுந்தொண்டர் இனத்தகத்தான்"

(தி. 6 ப. 8 பா. 5)

9. பொ-ரை: திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, நான் குற்றமுடையேன்; செய்யும் செயல்களை நல்லனவாகச் செய்யாத தீமையேன்; கண்டதையெல்லாம் பெற விரும்பும் கொடியேன்; உன் ஆணையின் வண்ணம் உன்னைப் பாடு மாற்றாற் பாடாத ஓர் அடியேன்.

கு-ரை: 'ஆயினும், எனக்கு இரங்கியருள்' என்பது குறிப்பெச்சம். சுவாமிகள் தம் துயரமிகுதியால் இவ்வாறு கூறி இறைவரைப் பெரிதும் குரையிரந்தருளினார், அதனானே, வினைதோறும். "நான்" என்று, பன்முறை மறித்து அருளிச் செய்தார், பணி, "நம்மைச் சொற்றமிழ் பாடுக" (தி. 12 தடுத். புரா. 70) என்று இறைவர் பணித்தது, "பணி" என்றது, பணிக்கப்பட்ட நெறியைக் குறித்தது.

'பணியால்' என, மூன்றாவது விரிக்க. 'எத்தன்மையேனாயினும் யான் உன் அடியேனாதலின் கைவிடுதல் கூடாது,' என்றற்கு, இறுதியில், "அடியேன்" என்று அருளிச் செய்தார்.

10. பொ-ரை: கரந்தை, வன்னி, ஊமத்தை, கூவிளை இவைகளை அணிந்த பரவிய புகழையுடைய திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனை, அன்பு நிறைந்த நம்பியாரூரன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளை விருப்புற்றுப் பாடுவோர், மேலோர்க்கு மேலோர்க்கு மேலோராவார்.