பக்கம் எண் :

1252
 

97. திருநனிபள்ளி

பதிக வரலாறு:

சுவாமிகள், திருவெண்காட்டீசரைப் பணிந்து, திருநனி பள்ளியடைந்து வணங்கிப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 149)

குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவர் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிறப்பினை வியந்தருளிச் செய்தது.

பண்: பஞ்சமம்

பதிக எண்: 97

திருச்சிற்றம்பலம்

985.ஆதியன் ஆதிரையன் அயன்

மாலறி தற்கரிய

சோதியன் சொற்பொருளாய்ச் சுருங்

காமறை நான்கினையும்

ஓதியன் உம்பர்தங்கோன் உல

கத்தினுள் எவ்வுயிர்க்கும்

நாதியன் நம்பெருமான் நண்ணும்

ஊர்நனி பள்ளியதே.

1



1. பொ-ரை: எப்பொருட்கும் முதலானவனும், ஆதீரை நாண்மீனைத் தனக்கு உரியதாகக் கொண்டவனும், பிரமனும் திருமாலும் அறிதற்கரிய ஒளிவடிவானவனும், சொல்லும் சொற்பொருளுமாய் நின்று, சுருங்குதல் இல்லாத வேதங்கள் நான்கினையும் ஓதியவனும், தேவர்களுக்குத் தலைவனும், உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் தந்தையும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனிபள்ளியே.

கு-ரை: 'சொல்லும், சொற்பொருளுமாய் இருப்பவனாகலின், அவற்றை எல்லாம் தெரிவிக்கும் முதனூலைச் செய்ய வல்லவனாயினான்' என்பார். "சொற்பொருளாய்ச் சுருங்காமறை நான்கினையும் ஓதியன்" என்று அருளிச்