பக்கம் எண் :

1253
 
986.உறவிலி ஊனமிலி உண

ரார்புரம் மூன்றெரியச்

செறுவிலி தன்னினைவார் வினை

யாயின தேய்ந்தழிய

அறவில கும்மருளான் மரு

ளார்பொழில் வண்டறையும்

நறவிரி கொன்றையினான் நண்ணும்

ஊர்நனி பள்ளியதே.

2



செய்தார். "ஓதியன்" இறந்த கால வினைப் பெயர். "நம் பெருமான்" என்றது, 'சிவன்' என்னும் பொருளதாய் நின்றது. "அது" பகுதிப்பொருள் விகுதி.

இத்திருப்பாடலின் முதலடியை,

"ஆதியன் ஆதிரையன் அன லாடிய ஆரழகன்"

(தி. 3 ப. 61 பா. 1)

என்ற திருஞானசம்பந்தர் திருமொழியுடன் வைத்துக் காண்க.

2. பொ-ரை: உறவுத் தொடக்கு இல்லாதவனும், குறைவில்லாதவனும், தன்னை மதியாதவரது மூன்று ஊர்களும் எரிந்தொழியும்படி அழித்த வில்லை உடையவனும், தன்னை நினைபவரது வினையெல்லாம் வலிமை குன்றி அழியும்படி, மிகவும் விளங்குகின்ற திருவருளை உடையவனும், தேனோடு மலர்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர், மயக்கத்தைத் தருகின்ற சோலைகளில் வண்டுகள் ஒலிக்கின்ற திருநனிபள்ளியே.

கு-ரை: 'மூன்றும்' என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. "செறு வில்" இறந்த கால வினைத்தொகை. 'வில்லி' என்பது, இடைக் குறைந்து நின்றது. 'அற இலகும்' எனப் பிரிக்க. பொழில் மயக்கத்தை உயைதாதல், இருளால் என்க.

"மருளார்பொழில் வண்டறையும்" என்றதனை, 'நண்ணும் ஊர்' என்றதன்பின் கூட்டி உரைக்க. "மருளார் மொழி வண்டறையும்" என்பதும் பாடம்.