988. | ஓடுடை யன்கலனா உடை | | கோவண வன்னுமையோர் | | பாடுடை யன்பலிதேர்ந் துணும் | | பண்புடை யன்பயிலக் | | காடுடை யன்னிடமா மலை | | ஏழுங் கருங்கடல்சூழ் | | நாடுடை நம்பெருமான் நண்ணும் | | ஊர்நனி பள்ளியதே. | | 4 |
989. | பண்ணற் கரியதொரு படை | | ஆழி தனைப் படைத்துக் | | கண்ணற் கருள்புரிந்தான் | | கரு தாதவர் வேள்விஅவி | | உண்ணற் கிமையவரை | | உருண் டோட உதைத்துகந்து | | நண்ணற் கரியபிரான் நண்ணும் | | ஊர்நனி பள்ளியதே. | | 5 |
4. பொ-ரை: ஓட்டினை உண்கலமாகவும், கோவணத்தை உடையாகவும், உடையவனும், ஒரு பக்கத்தில் உமையை உடையவனும், பிச்சை எடுத்து உண்ணும் தன்மையை உடையவனும், வாழ்வதற்குரிய இடமாகக் காட்டை உடையவனும், ஏழு மலைகளையும், கரிய கடல் சூழ்ந்த ஏழு நாடுகளையும் உடையவனும் ஆகிய நம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனிபள்ளியே. கு-ரை: "நாடு" என்றது தீவுகளை, எனவே, "ஏழும்" என்றது "நாடு" என்றதனோடும் இயைவதாம். "மலை" என்றதும், தீவுகளைச் சூழ்ந்துள்ள அவைகளையேயாம். 'பலிதேர்ந்து உண்டு, காடு இடமா உடையன் எனினும், உலகம் எல்லாவற்றையும் உடையன்' என்றவாறு. 5. பொ-ரை: ஆக்குதற்கு அரிதாகிய சக்கரப்படை ஒன்றை ஆக்கி, அதனைத் திருமாலுக்கு அளித்தவனும், தன்னை மதியாதவனாகிய தக்கனது வேள்வியில் அவிசை உண்ணச் சென்ற தேவர் அனைவரையும் சிதறி ஓடும்படி தாக்கிப்பின் அவர்கட்கு அருள் செய்து, ஒருவராலும்
|