பக்கம் எண் :

1256
 
990.மல்கிய செஞ்சடைமேல் மதி

யும்மர வும்முடனே

புல்கிய ஆரணன்எம் புனி

தன்புரி நூல்விகிர்தன்

மெல்கிய விற்றொழிலான் விருப்

பன்பெரும் பார்த்தனுக்கு

நல்கிய நம்பெருமான் நண்ணும்

ஊர்நனி் பள்ளியதே.

6

அணுகுதற்கரிய தலைவனாகியவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனிபள்ளியே.

கு-ரை: சிவபெருமான், சலந்தராசுரனை அழித்தற்பொருட்டுச் சக்கரப் படை ஒன்றை உண்டாக்கினமையையும், அதனால் சலந்தராசுரனை அழித்தபின்பு அச் சக்கரத்தை, தன்னை வழிபட்ட திருமாலுக்கு அளித்தமையையும் கந்தபுராணம் முதலிய சிவபுராணங்களுட் காண்க. அச் சக்கரம், உலகில் செய்யப்படும் சக்கரம் போல்வதன்று ஆதலின், "பண்ணற் கரியதொரு படை ஆழி" என்று அருளிச் செய்தார். 'ஆழிப்படை' என மாற்றிக்கொள்க. இழிவுபற்றி, "கருதாதவர்" எனப் பன்மையால் அருளினார். "உணற்கு" என்றதன் பின், 'சென்ற' என்பது எஞ்சிநின்றது. "உகந்து" என்ற வினையெச்சம், "பிரான்" எனற்விடத்து எஞ்சிநின்ற, 'ஆகியவன்' என்பதனோடு முடியும், 'கருதாதவன்' எனவும், 'உகந்த' எனவும் ஓதுவனவே பாடங்கள்போலும்!

6. பொ-ரை: நிறைந்த, சிவந்த சடையின்மேல், சந்திரனும் பாம்பும் ஒருங்கியைந்து பொருந்திய திருமேனியனாகிய வேத முதல்வனும், எங்கள் தூயோனும், முப்புரி நூலையணிந்த, வேறுபட்ட தன்மையை உடையவனும், தன்மேல் அன்புடையவனாகிய மிக்க தவத்தையுடைய அருச்சுனனுக்கு, மெல்லிய வில்தொழிலினால் அருள்பண்ணினவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனிபள்ளியே.

கு-ரை: "புல்கிய" என்ற பெயரெச்சம் இடப்பெயர் கொண்ட தாகலானும் அவ்விடந்தான். இறைவனது திருமேனியே ஆகலானும், இவ்வாறு உரைக்கப்பட்டது. அருச்சுனனோடு போர் செய்தது. வன்கண்மை காரணமாகவன்றி, அருள்காரணமாகவே யாகலான், அதனை, "மெல்கிய விற்றொழில்" என்று அருளினார்.