பக்கம் எண் :

1257
 
991.அங்கமொ ராறவையும் அரு

மாமறை வேள்விகளும்

எங்கும் இருந்தந்தணர் எரி

மூன்றவை யோம்புமிடம்

பங்கய மாமுகத்தாள் உடை

பங்கன் உறைகோயில்

செங்கயல் பாயும்வயல் திரு

வூர்நனி பள்ளியதே.

7

 

992.திங்கட் குறுந்தெரியல் திகழ்

கண்ணியன் நுண்ணியனாய்

நங்கட் பிணிகளைவான் அரு

மாமருந் தேழ்பிறப்பும்

மங்கத் திருவிரலால் அடர்த்

தான்வல் அரக்கனையும்

நங்கட் கருளும்பிரான் நண்ணும்

ஊர்நனி பள்ளியதே.

8



7. பொ-ரை: தாமரை மலர்போலும் முகத்தையுடைய உமா தேவியைப் பாகத்தில் உடையவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற இடம், அந்தணர்கள் மூன்று எரிகளோடே, ஆறு அங்கங்களையும், அரிய வேதங்களையும், வேள்விகளையும் எவ்விடத்தும் இருந்து வளர்க்கின்ற இடமாகிய, செவ்விய கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய அழகிய ஊரான திருநனிபள்ளியே.

கு-ரை: "அவை" பகுதிப்பொருள் விகுதி. முத்தீயை ஓம்புதலே அந்தணர்க்குச் சிறந்த தொழலாகலின், 'எரிமூன்றோடு' என. அவ்விடத்து ஓடுருபு விரிக்க, "ஓம்புமிடம்" என்றது, ஒரு பொருள்மேற் பலபெயராய் வந்தது. செவ்விய கயல் - அழகிய கயல்.

8. பொ-ரை: சிறிய பிறையாகிய, விளக்கம் அமைந்த கண்ணிமாலையைச் சூடியவனும், நுண்ணியனாய் நின்று, எழுவகைப் பிறப்புக்களும் கெடும்படி, நம்மிடத்து உள்ள வினையாகிய நோயை