பக்கம் எண் :

1258
 
993.ஏன மருப்பினொடும் எழில்

ஆமையும் பூண்டுகந்து

வான மதிள்அரணம் மலை

யேசிலை யாவளைத்தான்

ஊனமில் காழிதன்னுள் ளுயர்

ஞானசம் பந்தர்க்கன்று

ஞானம் அருள்புரிந்தான் நண்ணும்

ஊர்நனி பள்ளியதே.

9



நீக்குகின்ற, உயர்ந்த அரிய பெரிய மருந்தாய் உள்ளவனும், வலிய அரக்கனாகிய இராவணனையும், அழகிய ஒரு விரலால் நெரித்தவனும் ஆகிய, நமக்கு அருள்செய்யும் பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனிபள்ளியே.

கு-ரை: 'குறுந் திங்களாகிய திகழ் கண்ணித் தெரியல்' என்க.

'கண்ணித் தெரியல்' இருபெயரொட்டு. 'நங்கண் பிணிகளை மருந்து' எனக் கொள்க. "பிணி" என்றது, உருவகம். 'மங்கக் களை மருந்து' என இயைக்க. "அரக்கனையும்" என்ற உம்மை, சிறப்பு.

9. பொ-ரை: பன்றியின் கொம்பையும், அழகிய ஆமையோட்டையும் விரும்பியணிந்து, வானத்திற்செல்லும் மதிலாகிய அரணின்முன், மலையையே வில்லாக வளைத்து நின்றவனும், குறையில்லாத சீகாழிப்பதியுள் உயர்ந்தோராகிய ஞானசம்பந்தர்க்கு ஞானத்தை அருள்செய்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனிபள்ளியே.

கு-ரை: 'மதிளரணம்' இருபெயரொட்டு. 'அரணம்' என்றதன் பின், 'முன்' என்னும் பொருளதாகிய கண்ணுருபு விரிக்க.

இத்தலம், ஞானசம்பந்தர் தம் தந்தையாரது பியல்மேல் இருந்து தம்மீது ஆணை வைத்துப் பாலைநெய்தல் பாடியருளியதாகலின், அச்சிறப்புப் பற்றி, அவருக்கு ஞானம் அருள்புரிந்தமையை நினைந்து அருளிச் செய்தார் போலும்!