98. திருநன்னிலத்து பெருங்கோயில் பதிக வரலாறு: சுவாமிகள், திருப்புகலூரில் செங்கல் பொன்னாகப் பெற்றுத் திருவாரூரையடைந்து பெருமானை வணங்கிப் பலநாள் தங்கியிருந்து, அருகில் உள்ள பல பதிகளையும் வணங்கிய பின்னர், திருவாரூரினின்றும் புறப்பட்டு, திருநன்னிலத்துப் பெருங்கோயிலையடைந்து பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 56) குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரது பெருமைகளை வகுத்து அருளிச் செய்தது.பண்: பஞ்சமம் பதிக எண்: 98 திருச்சிற்றம்பலம் 995. | தண்ணியல் வெம்மையினான் தலை | | யிற்கடை தோறும்பலி | | பண்ணியன் மென்மொழியா ரிடங் | | கொண்டுழல் பண்டரங்கன் | | புண்ணியநான்மறையோர் முறையா | | லடிபோற் றிசைப்ப | | ண்ணிய நன்னிலத்துப் பெருங் | | கோயில் நயந்தவனே. | | 1 |
1. பொ-ரை: புண்ணியத்தைச் செய்கின்ற, நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள், முறைப்படி தனது, திருவடிக்குப் போற்றி சொல்லி வழிபடும்படி, பலரும் அடைந்து வணங்கும் திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தண்ணிய இயல்பினையும், வெவ்விய இயல்பினையும் ஒருங்குடையவன்; வாயில்கள்தோறும் சென்று, பண்போலும் இயல்பினையுடைய இனிய மொழியையுடைய மகளிரிடம் தலையோட்டில் பிச்சை யேற்றுத்திரிகின்ற 'பாண்டரங்கம்' என்னும் கூத்தினை யுடையவன். கு-ரை: இறைவனிடத்து அறமாய்க் காணப்படுவதும், மறமாய்க்
|