பக்கம் எண் :

1261
 
996.வலங்கிளர் மாதவஞ்செய் மலை

மங்கையொர் பங்கினனாய்ச்

சலங்கிளர் கங்கைதங்கச் சடை

யொன்றிடை யேதரித்தான்

பலங்கிளர் பைம்பொழில்தண் பனி

வெண்மதி யைத்தடவ

நலங்கிளர் நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே.

 

997.கச்சியன் இன்கருப்பூர் விருப்

பன்கரு திக்கசிவார்

உச்சியன் பிச்சையுண்ணி உல

கங்களெல் லாமுடையான்



காணப்படுவதும் கருணை ஒன்றே யாதலின், 'தண்மையையும், வெம்மையையும் ஒருங்குடையவன்' என்று அருளினார். மாறுபட்ட இருதன்மைகள் ஒரு பொருளிற் காணப்படுவது உலகில் இல்லாததோர் அற்புதம் என்றவாறு. 'மொழியாரிடக் கொண்டு' என்பதும் பாடம்.

2. பொ-ரை: பயன் மிகுந்த, பசிய சோலைகள், குளிர்ந்த, வெள்ளிய சந்திரனைத் தடவுதலால் அழகு மிகுகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், வெற்றி மிக்க, பெரிய தவத்தைச் செய்த மலைமகளை ஒருபாகத்தில் உடையவனாய், வெள்ளம் மிகுந்த கங்கையைத் தனது சடைகளுள் ஒன்றிலே தங்கும்படி தடுத்து வைத்துள்ளான்.

கு-ரை: மலைமகள் தவம்செய்து இறைவன் மணக்கப் பெற்றமையைக் கந்தபுராணத்துட் காண்க. 'உலகமெல்லாம் அழியுமாறு வந்த கங்கையின் பெருக்கம் முழுவதும் சடை ஒன்றில் புல்நுனி மேல் நீர்போல் அடங்கச் செய்தவன்' என, அவனது பேராற்றலை விதந்தருளிச் செய்தவாறு.

3. பொ-ரை: நொச்சியின் பச்சிலையும், நுரை இல்லாத தூய நீரும் கொண்டு வழிபடுவோர் விரும்புகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான். கச்சிப்பதியில் எழுந்தருளியிருப்பவன்; இனிய கரும்பின்கண் செல்லுகின்ற விருப்பம்போலும்