பக்கம் எண் :

1262
 
நொச்சியம் பச்சிலையான் நுரை

தீர்புன லால்தொழுவார்

நச்சிய நன்னிலத்துப்

பெருங் கோயில் நயந்தவனே.

3

998.பாடிய நான்மறையான் படு

பல்பிணக் காடரங்கா

ஆடிய மாநடத்தான் அடி

போற்றியென் றன்பினராய்ச்

சூடிய செங்கையினார் பலர்

தோத்திரம் வாய்த்தசொல்லி

நாடிய நன்னிலத்துப் பெருங்

கோயில் நயந்தவனே.

4



விருப்பம் செல்லுதற்கு இடமானவன்; தன்னை நினைந்து உருகுபவரது தலைமேல் இருப்பவன்; பிச்சையேற்று உண்பவன்; உலகங்கள் எல்லாவற்றையும் உடையவன்.

கு-ரை: சிறப்புடைத் தலங்களுள் ஒன்றாதல் பற்றிக் கச்சியை விதந்தோதினார். இன்பமே வடிவினனாகலின், இன்பத்தை விரும்பும் இயல்பினவாய உயிர்கள் பலவற்றின் விருப்பத்திற்கும் இடம் இறைவனே என்க. "பிச்சை உண்ணி; உலகங்கள் எல்லாம் உடையன்" என்றது, அவனது ஒன்றொடொன்றொவ்வா நிலைகளைக் குறித்தருளியவாறு. நுரையுடைய நீர் வழிபாட்டிற்கு ஆகாமையை அறிந்து கொள்க.

4. பொ-ரை: தலைமேற் குவித்த கையை உடைய பலர், மிக்க அன்புடையவர்களாய். 'திருவடி போற்றி' என்று, பொருந்திய தோதிரங்களைச் சொல்லி அடைகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற இறைவன், தன்னால் பாடப்பட்ட நான்கு வேதங்களை யுடையவன்; இறந்த பல பிணங்களையுடைய காடே அரங்கமாக ஆடுகின்ற, சிறந்த நடனத்தையுடையவன்.

கு-ரை: 'பல தோத்திரம்' என்பதும் பாடம். "வாய்த்த" என்றது வினைப்பெயர்.