பக்கம் எண் :

1263
 
999.பிலந்தரு வாயினொடு

பெரி தும்வலி மிக்குடைய

சலந்தரன் ஆகம்இரு

பிள வாக்கிய சக்கரம்முன்

நிலந்தரு மாமகள்கோன்

நெடு மாற்கருள் செய்தபிரான்

நலந்தரு நன்னிலத்துப் பெருங்

கோயில் நயந்தவனே.

5

 

1000.வெண்பொடி மேனியினான் கரு

நீல மணிமிடற்றான்

பெண்படி செஞ்சடையான் பிர

மன்சிரம் பீடழித்தான்

பண்புடை நான்மறையோர் பயின்

றேத்திப்பல் கால்வணங்கும்

நண்புடை நன்னிலத்துப் பெருங்

கோயில் நயந்தவனே.

6



5. பொ-ரை: நன்மையைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், பிலம் போன்ற வாயையும், பெரிதும் மிகுந்த வலிமையையும் உடைய சலந்தராசுரனது உடலை இரண்டு பிளவாகச் செய்த சக்கராயுதத்தை, முன்பு, மண்ணை உண்டு உமிழ்ந்த திருமகள் கணவனாகிய திருமாலுக்கு அளித்த தலைவன்.

கு-ரை: "நிலந்தரு" என்றதனை, 'மக்களுக்கு நிலம் முதலிய செல்வத்தைத் தருகின்ற மாமகள்' என திருமகளுக்கு ஆக்கி உரைத்தலுமாம்.

6. பொ-ரை: நல்ல பண்பினையுடைய நான்கு வேதங்களை உணர்ந்தவர்களாகிய அந்தணர்கள், பல மந்திரங்களையும் நன்கு பயின்று, பன்முறை துதித்து வணங்கும், நட்பாம் தன்மையுடைய திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், வெண்பொடியைப் பூசிய மேனியை உடையவன்; நீல மணிபோலும் கரிய கண்டத்தை யுடையவன்; கங்கையாகிய பெண் பொருந்தியுள்ள சடையை